பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும் உள்ளமும் 懿翼

போனவன், மாலையிலே களைத்துப்.ோய் வருகிருனே, அவனுக்கு இன்முகம் காட்டி ஆறுதல் சேய்யவேண்டும் என்று எண்ணி அவள் அவனை வரவேற்பதில்&. சூரியன் வருவதும் தாமரை மலர்வதும் இயற்கை நியதி. அது போல அவன் வரவே, அவள் முகம் மலர்கிரு ஸ். அவன் இல்லாத வீட்டிலே அவளுக்கு வேலே இருக்கிறது; வீட்டைப் பாதுகாக்கும் வேலை இருக்கிறது. அவன் இருக்கும்பொழுதோ இன்பம் இருக்கிறது. அவன் தனக்கு அருகிலே இருக்கிருன் என்ற நினைப்பு ஒன்றே அவளுக்கு எத்தனையோ உற்சாகத்தைக் கொடுக்கிறது.

அவன் வருவான் என்று எண்ணி அதற்குள் காபி போட்டு வைக்கிருள்; பலகாரம் செய்து வைக்கிருள். தலைவாரிப் பின்னிக்கொள்கிருள். முகத்தைக் கழுவிப் பொட்டிட்டு மையிட்டுக் கொள்கிருள். மாலைக்காலத்தில் களைப்புடன் வரும் காதலனுக்குமுன் புதுமலர்ச்சி பெற்ற மலரைப்போல நிற்பதற்குத் தயாராகிருள்.

மல்லிகைப்பூ மாலையில் வீதியிலே வருகிறது. வாங்கி வைக்கிருள். ரோஜாப்பூ வாங்கி வைக்கிருள். அவன் வந்தவுடனே அந்தப் பூவைச் சூட்டிக்கொள்ளவேண்டும் என்று அவற்றை வைத்திருக்கிருள்.

அவள் முகமலர்ச்சிக்கும் மனமலர்ச்சிக்கும் சூட்டிக் கொள்ளும் புது மலர் சோபையைக் கொடுக்கிறது. காதலன் ஆசையோடு அந்த அழகுப் பிழம்பைக் கண்ணுல் நுகர்ந்து களைப்புத் தீர்கிருன் சிற்றுண்டி அருந்திப் பசியுந் தீர்கிருன்.

米。 米。 * ,掌、

தினந்தோறும் இவ்வாறு புதுமை யழகிலே ஒளிரும் மடமங்கையும் அதைக்கண்டு புத்துணர்ச்சி பெறும் காதலனும் ஒவ்வொரு நாளும் தம் வாழ்க்கையைப் புதுக்கிக் கொள்கிருர்கள். . . . . ." - -