பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நாடோடி இலக்கியம்

இந்த நெறியிலே சென்றுகொண் டிருந்த துணைவர் களின் வாழ்வில் இடையே சிறு பிரிவு நேர்கிறது. காதலன் ஏதோ காரியமாக வெளியூருக்குச் செல்கிருன். சிலநாட்கள் தங்கிவிட்டு வரவேண்டிய வேலை இருக்கிறது. போய் அடிக்கடி கடிதம் எழுதுகிருன்.

அவன் பிரிந்திருக்கும் நா ட் க ளி ேல அவன் சுத்தத்தை உத்தேசித்து நீராடினுள்; முகம் கழுவிச் கொண்டாள். தலையை ஒருவாறு கோதி முடித்துக் கொண்டாள். வழக்கம்போல் அலங்காரம் செய்து கொள்ளவில்லை. மலர் வாங்கி வைத்துக்கொள்ளவில்&ல. ஆபரணங்களைப் புனைந்து கொள்ளவில்லை. அ வ ன் கண்களுக்கு விருந்து செய்வதற்காக ஏற்பட்டவை அவை, அவன்தான் இ ல் லே .ே ய! இந்த அலங்காரங்கள் யாருக்காக? இது மட்டுமா? நாவிற்கு ருசியான சமையலை, விதவிதமான உணவுகளை, சமைக்கத் தெரிந் தவள் அவள்; அவனுடைய ருசி தெரிந்து சமைத்து உண் பிப்பவள். அவன் ஊரில் இல்லாவிட்டால் வழக் கப்படி சமைத்து அவள் உண்பதுதானே? அதுதான் இல்லை. ஏதோ வற்றல் குழம்பு செய்து வெறுஞ் சோற்றை வடித்து வயிற்றை நிரப்பிக் கொள் கிரு ஸ். அவன் இல்லாதபோது அறுசுவை உண்டியாக இருந்தா லும் அவளுக்கு ருசிக்காது. - -

அவன் ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்று மாலை வருவதாகக் கடிதம் எழுதியிருக்கிருன். அவளுக்கு உண்டான குது.ாகலம் வருணித்து முடிவதா, என்ன? வீட்டைப் புதுமுறையில் அலங்கரித்தாள். து சு தும்பை யெல்லாம் தட்டின ஸ். புது மணவாளப் பிள்ளையை வரவேற்பதைப் போன்ற ஏற்பாடுகள் யெல்லாம் . செய்தாள். கடிதம் வந்ததுமுதல் அவளுக்கு ஒரு நிமிஷம் கழிவது யுகமாக இருந்தது. எப்பொழுது மாலை வரும் என்று ஏங்கிக் காத்துக் கிடந்தாள். - . . . . . . . . . . . . .