பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 o, அடிபட்ட நாய்

- பிறருக்குத் தெரியும்படி அவமானம் அடைவது மனிதர்கள் பொறுக்கத் தகாத நிகழ்ச்சி. அவமானம் அடைவதனால் வரும் கோபம் ஒரு பங்கு அதை மற்ற வர்கள் உணர்ந்து விட்டார்களே என்ற ஆத்திரமோ ப்த்துப் பங்கு.

ஒருவன் தடுக்கி விழுந்து காயம்பட்டுக் கொள்கிமுன். அவன் உடம்பில் பட்ட காயத்தால் அவனுக்கு ஒரளவு வேதனை இருக்கத்தான் இருக்கும். ஆனல் அவன் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. அவன் விழும்போது ப்ார்த்துவிட்டுச் சிரிக்கிருர்களே, அவர்கள் சிரிப்பிளுல் உண்டாகும் மனப் புண்தான் அதிக வேதனையை உண் டாக்குகிறது. பல்லேக் கடித்துக்கொள்கிருன். அப்படியே அவர்களை நசுக்கிவிடலாமா என்று ஆத்திரம் ஆத்திர மாக வருகிறது அவனுக்கு. சிரித்தவர்கள் குழந்தை களாக இருந்துவிட்டாலோ பளிர் பளீரென்று கன்னத்தில் அறைந்தே விடுகிருன். -

அவன் விழுந்ததற்கு அவர்கள் காரணமென்று. கோபித்துக்கொண்டா அப்படிச் செய்கிருன்? இல்லை, இல்லை. அவன் விழுந்ததை விளம்பரப்படுத்துபவர். களாக அவர்கள் இருக்கிருர்களே என்பதுதான் அவனுடைய ஆத்திரத்திற்குக் காரணம். .

இந்த மான உணர்ச்சி சிறு வயசு முதற்கொண்டே, மனித ஜாதியிடம் ஏற்பட்டு வளர்ந்து வருகிறது. பிறர் தன்னை அழகு காட்டும்போது குழந்தைக்கு அழுகையும் கோபமும் வருவதை நாம் பார்க்கவில்லையா?