பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளக் காதல் 157

களினிடையே காதலனையும் காதலியையும் பார்க்கலாம். சில காட்சிகள் வருமாறு:

餐 。 臺 * 桑

ஒரு பெண் நெல்லுக் குத்துகிருள். அவள் கணவன் வேலையாக வெளியில் போயிருக்கிருன், வீட்டுக்குப் புறத்திலே மரத்தடியில் ஒரு பாறைக்குழியே உரலாக அவள் நெல்லைக் குத்துகிருள். அன்று அந்த வேளையிலே அவளுடைய கள்ளக் காதலன் வருவதாகச் சொல்வி யிருந்தான். அவனே எதிர்பார்த்து அவள் குத்திக்கொண் டிருக்கிருள். : - -

அவன் வந்துவிட்டான். அவளுடைய உணர்ச்சி பொங்கிப் பெருக்கெடுத்து ஒடுகிறது. அவைேடு இன்பமாகப் பேசி அளவளாவுகிருள். பிறகு அவன் விடை பெற்றுக்கொண்டு போகிருன். அவள் மனம் அவனது பிரிவினுல் ஊசலாடுகிறது. அவள் அவனை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே நிற்கிருள். உலக்கை தடுமாறுகிறது. அவன் போய்க்கொண்டே இருந்தவன், . திடீரென்று நின்று ஏதோ சொல்கிருன். அவன் முகத்தில் பயத்தின் அறிகுறி தோன்றுகிறது. அதைச் சொல்லிவிட்டு அவன் விரைவாகப் போய்விடுகிருன், அவன் என்ன சொன்னன்?

அவன் விடை பெற்றுச் சென்றபோது எதிர்ப் பக்கத்திலிருந்து அந்தப் பெண்ணின் கணவன் வந்து விட்டான். அவன் நெடுந்து ரத்தில் வருவதைக் கள்ளக் காதலன் கவனித்தான். அந்தப் பெண்ளுே இந்த உலகத்தையே மறந்து கள்ளக் காதலன் போகும் கோலத்திலே கண்ணேயும் கருத்தையும், பதிய வைத் திருந்தாள். பின்னல் தன் கணவன் வருவதை அவள் கவனிக்கவில்லை. அவன் அவளை அணுகி உண்மை தெரிந்துகொண்டால்-? இந்த அச்சத்தால் முன்னே: செல்லும் கள்ளக் காதலன். அவளை எச்சரிக்கிருன்.