பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நாடோடி இல்க்கியம்

நெல்லுக் குத்தற பெண்ணே

சும்மா பாக்கிறே என்ன - உன்

புருசன் வாரான் பின்னே - நீ

புடைச்சுப் போட்டி கண்ணே !

ஆஹாங்.........ஊஹாங் !

இந்தப் பாட்டு இப்போது நெல்லுக் குத்துகிற, பாட்டாக வழங்குகிறது.

共 擎 曾

இரவில் தன் கணவனுக்கு உணவு பரிமாறும் சமயத்தில் சோர நாயகனைச் சத்திப்பது ஒருத்திக்கு வழக்கம். கணவன் உண்டுகொண் டிருப்பு:ான்.அப்போது சோர நாயகன் புறக் கடைப் பக்கத்தில் வந்து தான் கொண்டுவந்த மணியை ஆட்டித் தன் வரவைக் குறிப்பிப்பான். அவள், 'ஐயையோ! மாடுவந்து கீரைப் பாத்தியை அழித்துவிடுமே!’ என்று ஓடுவாள். அவள் வரும் வரைக்கும் கணவன் பாதி உண்ட நிலையில் உட்கார்ந்திருப்பான். அவளோ சோர நாயகனைக் கண்டு அளவளாவிவிட்டு வந்து, மாடுகளை ஒட்டிவிட்டு வந்த தாகச் சொல்லுவாள். பாதி சாப்பிடும்போது கணவன் எழுந்து வரமாட்டானென்பது அவள் நம்பிக்கை. -

இரண்டு நாளைக்கு ஒரு தடவை, மூன்று நாளைக்கு. ஒரு தடவை இப்படியே நடந்துகொண்டு வந்தது. கணவன் எவ்வளவுதான் முட்டாளாக இருந்தாலும் அடுத்தடுத்து இப்படி நடக்கிறதே என்று யோசிக்க மாட்டாளு; யோசித்தான். சிறிது சந்தேகம் தட்டியது. அதை நிவர்த்தி செய்துகொள்ள எண்ணினன்.

அன்று வழக்கம்போல் அவள் இலையில் சோற்றைப்

போட்டுக் குழம்பையும் ஊற்றி முடித்தாளோ இல்லையோ, கொல்லைப்புறத்தில் மணியொலி கேட்டது.