பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டி கதையும் பாட்டும் 3

  • , மிகவும் தேர்ந்தவள். தமிழ் நாட்டுப் பாட்டிகள் யாவரும்

அப்படித்தான் இருந்தார்கள்.

கிழவி கதை சொல்ல ஆரம்பிக்கிருள்: ஒரே ஒரு காட்டிலே ஒரே ஒரு யானே. அது மனம் போனபடி திரிந்து கொண் டிருந்தது. ஒர் ஊருக்குப் பக்கத்திலே வந்தது. அப்போது ஒரே ஒரு குருவியாம். அந்தக் குருவி வந்து ஆனை மேலே உட்கார்ந்ததாம். என்னடா இது குறு குறு: என்கிறதே என்று ஆனை தும்பிக்கையாலே தடவி ப் பார்த்தது. குருவி அதன் கைக்குப் படாமலே இருந்தது. ஆனையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. யாரப்பா நீ?" என்று கோபத்தோடு கேட்டது. நான் தான் சிட்டுக் குருவி; ஆனை மாமாவைப் பார்க்க வந்தேன். செளக்கியந் தானே? உங்கள் ஊரில் எல்லோரும் சுகமா? என்று தைரியமாகக் குருவி பேசியது.” .

என்ன ஆச்சரியம்! இந்தக் குருவிக் கதை பிரிவுத் தீயிலே வதங்கிக் கிடக்கும் அந்த மடமங்கையின் கவனத்தைத் திருப்புகிறதே! கிழவி, ஆனையும் குருவியும். சிநேகம் பண்ணிக்கொண்டு எங்கெங்கேயோ போய் என்ன என்னவோ பண்ணினவென்று கதை சொல்கிருள். தலைவி முதலில் அசட்டையாகக் கேட்டாள். பிறகு கொஞ்சம் கூர்ந்து கவனித்தாள். அப்பால் அதிலே ஈடு பட்டு விட்டாள். ! . . .- ; . . . . . .

கிழவி மிகவும் தந்திரக்காரி: தலைவி கதையைக் கவனிக்கிருளா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள எண்ணி, சுவாரசியமான இடத்தில் கொஞ்சம் மெளனம் சாதிக்கிருள். . . . . . . . . . . . . . . . . . . .

தலைவி படபடப்போடே. அப்புறம்?' என்று கேட்கிருள். . . . . . . . .

கிழவி தன் தந்திரம் பலித்துவிட்டதென்று எண்ணி. மகிழ்கிருள். பிறகு கதை வர்ணனைகளோடும் தொனி பேதங்களோடும் உரையாடல் நயங்களோடும் படர்கிறது.