பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நாடோடி இலக்கியம்

ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை என்பது ஒரு பழமொழி. அந்த பாட்டைப் போலக் கற்றறிந்த புலவன் பாடுவது அருமையாம்.

ஏற்ற மரம், கிணறு நிறைந்த பிரதேசங்களில் வேளாண்மைக்கு உதவியாக இருக்கும் கருவி. சால் பிடிக்கும் ஆள் ஒருவன் இருப்பான்: மரத்தின் மேல் ஏறி மிதிப்பவர் ஒருவரோ, இருவர் அல்லது மூவரோ இருப் பார்கள். குனிந்து நிமிர்ந்து சால் பிடிப்பவனே பாட்டுப் பாடுவான். அவனுடைய பாட்டிலே காதல் இருக்கும்: ராமாயணம் வரும்: பாரதக் கதை படரும். அந்த ஏற்றப் பாட்டிலக்கியத்திலே வரும் காதற் காட்சி ஒன்றைப் பாருங்கள். - -

வேலையன் கீழே இருந்து சால் பிடித்து நீர் இறைக்

கிமுன். சுப்பையன் ஏற்ற மரத்தின்மேல் மேலும் கீழும் ஏறி மிதிக்கிருன். சுப்பையன் நெடுந்துரத்தில் எதையோ காண்கின்ருன். அந்தக் காட்சி அவனுக்கு ஒரு வகையான இன்பத்தை உண்டாக்குகிறது. தன்னுடைய உணர்ச்சி யைத் தன் தோழனுக்கு வெளியிட வேண்டுமென்ற விருப்பம் அவனுக்கு எழுகிறது. வேலேயனுக்கு அதைப் பார்க்க முடியாது. அவன் கீழே அல்லவா இருக்கிருன்? சுப்பையன் சொல்லத் தொடங்கு கிருன்: -

'வேல மரப் பாதையிலே - வேலையா' என்று சொல்வி வரும்போது வேலையன் காதில் வாங்கிக்கொள்ள வில்லை. அவன் தன் வேலையே கண்ணுக இருப்பவன். பரந்த வெளி முழுதும் தன் பார்வையைத் திரியவிடும் சுப்பையனைப் போன்றவன் அல்ல. -

"என்ன, கதை ஆரம்பித்துவிட்டாயா? எனக்கு வேலையிலே கண்ணிருக்கு, சுப்பையா' என்று அவன் பதில் சொல்கிருன்.