பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஏற்றக்காரன் காதல்

(5ாடோடிப் பாட்டுக்களில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் பாமரர் பாட்டுக்கள் (FOLK - SONGS) என்று குறிக்கும் பாடல்களேயே நாடோடிப் பாட்டுக்கள் என்று நாம் வழங்கு கிருேம். நாடு முழுவதும் ஜீவளுேடு உலவும் பாடல்கள் அவை. அவற்றை இயற்றியவர் இன்னரென்று தெரியாது.

தொழிலாளிகள், குடியானவர்கள், வேலை செய்யும் பெண்டிர் முதலியவர்கள் தங்கள் தங்கள் வேலையிஞல் 'உண்டாகும் சிரமத்தைப் போக்கிக்கொள்ளப் பாடும் பாட்டுகள் ஒரு வகை. ஏழை மக்கள் பொங்கல் முதலிய விசேஷ காலங்களில் ஒன்று கூடி விழா அயரும்போது ஆடியும் பாடியும் இசைக்கும் பாடல்கள் ஒரு வகை.

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி நிலாக்காட்டிச் சோறுரட்டித் தலையை ஆட்டித் தோளே வீசச் செய்து விளையாட்டுக் காட்டும் தாய்மார்கள் குழந் தையோடு குழந்தையாகப் பாடும் குழந்தைப் பாட்டுக்கள் ஒருவகை. சிறுமியரும் சிறுவர்களும் தாம் ஆடும் பல வகை விளையாடல்களுக்கு இடையே பாடும் பாடல்கள் ஒருவகை. எல்லா வகைச் சாதியினரும் தங்கள் குடும் பத்திலே நிகழும் கல்யாணம் முதலிய நிகழ்ச்சிகளிலே சம்பிரதாயமாகப் பாடிவரும் பாடல்கள் ஒர் இனம். இவ்வாறு பலவகைப்பட்டு நிற்கும் இப்பாடல்கள் எல்லாமே புலவர் உலகத்துக்கு புறம்பாய், இலக்கண வேலிக்கு அருகே வராமல் நாட்டில் ஒடி உலவிக் கொண் டிருக்கின்றன. - - -

தொழில் செய்வார் பாடல்களில் தலைமை இடத்தை வகிப்பது ஏற்றப்பாட்டு.