பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாடோடி இலக்கியம்

வற்புறுத்தும் செவிலியர் உரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்கு உரிய' வை இவை என்று உரையாசிரியர்' எழுதுகிறார்.

பண்ணத்தி என்பது பாட்டும் உரையும் போல இருக்குமென்றும், எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புக் களை உடையதென்றும் இலக்கணம் அமைத்திருக்கிறார்கள். வஞ்சிப்பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு என்று மூன்று பாட்டுக்களைப் பேராசிரியர் என்ற உரைகாரர். உதாரணங்களாகக் காட்டுகிறார். இவற்றை யெல்லாம் இக்காலத்தார் "பாமர இலக்கியம்" (Folk-lore), என்று சொல்லுகிறார்கள். - -

இயற்கைப் பாட்டாகிய நாடோடிப் பாட்டை இலக்கிய வ்கையில் ஒரு வகையாகச் சேர்த்து எண்ணினர் பண்டைக் காலத்து ஆசிரியர்கள் என்ற உண்மை யைத் தொல்காப்பியத்திலிருந்து நாம் அறிகிறோம். இப்போது உள்ள தமிழ் நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம்; மிகப் புதுமையானது பாரதியார் பாட்டு. தொல்காப்பியம் இலக்கணம் அமைத்த அந்தப் பாட்டைக் கவி பரம்பரையினரும் பாராட்டினார்கள்; பாரதியார் வரையில் அந்தப் பாராட்டு வந்து கொண்டேயிருக்கிறது.

அவர்களுடைய பாராட்டைப் பெற்ற நாடோடி இலக்கிய உலகத்தில் நாமும் கொஞ்சம் நுழைந்து பார்க்கலாம்.