பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டி கதையும் பாட்டும் 1 1

ரோசம் மூளுகிறது. "வேறு ஒன்று சொல்; நான் விடு விக்காவிட்டால் பார் என்று வீறு பேசுகிருள் தலைவி. பாட்டி இந்தத் தடவை சிறிது சுலபமாகப் புதிர்போடு கிருள். அதைத் தலைவி விடுவித்து விட்டு வெற்றிபெற்ற வீரன் அடையும் மகிழ்ச்சியை அடைகிருள். இந்தி விளையாட்டிலே பொழுது போவதே தெரியவில்லை.

பாட்டியிடம் இன்னும் புதிய சரக்கு இருக்கிறது. கதைகளும் விடுகதைகளும் சொல்லி அலுத்துப்போல்ை, அவள் ஆரம்பிக்கிருள் பாட்டை. என்ன பாட்டுத் தெரியுமா? புத்தகத்தில் இல்லாத பாட்டு. வாய் மொழியாகப் பாட்டிகளின் பரம்பரையிலே வந்த பாட்டு அது. ஒடப் பாட்டு, மோதிரப் பாட்டு முதலிய நாடோடிப் பாட்டுக்களைப் பாட்டி ராகத்தோடும் அபி நயத்தோடும் சொல்லுகிருள். தலைவி .ெ சா க் கி ப் போகிருள். - *

풍 - 爱 彎 养

இந்தக் காட்சிகளை எங்கோ நாடகத்தில் கண்டதாக எண்ண வேண்டாம். தொல்காப்பியத்தில், தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களின் வகைகளைச் சொல்லும் பகுதியில், தல்ைவனைப் பிரிந்த தலைவிக்கு ஆறுதல் கூறும் செவிலித் தாய் உபயோகப்படுத்தும் இலக்கியங்கள் இன்னவை என்ற செய்தி சில சூத்திரங்களில் சொல்லப் படுகின்றன. அவற்றிலும் அவற்றின் உரைகளிலும் உள்ள வற்றை ஊன்றிக் கவனிக்கும்போது மேலே சொன்ன காட்சிகளை நம் அகக் கண்ணில் காண்கிருேம். ஆனைக் கதை போன்ற கதைகளுக்கு, பொருளொடு புண்ராப் பொய்ம்மொழி என்றும், சிரிப்பு மூட்டும் கதைகளுக்கு, 'பொருளொடு புணர்ந்த நகைமொழி என்றும், விடு

கதைகளுக்கு, பிசி" என்றும், நாடோடிப் பாட்டுக்..

களுக்கு, ' பண்ணத்தி' என்றும் .ெ பயர் க ள் பழங் காலத்தில் வழங்கினவென்று தெரிகிறது. "தலைமகளை