பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - நாடோடி இலக்கியம்

"அடுத்த மாசம் பரிசம் வைப்பேன்’ என்று வேலையன் கல்யாண முகூர்த்தத் துக்கு நாள் குறிப்பிட்டுவிடுகிருன். சுப்பையனுக்கு அதுவே கல்யாண அழைப்பாகவும் ஆகி விடுகிறது போலும் பாட்டு முழுவதையும் இப்போது பாருங்கள். - -

வேலமரப் பாதையிலே- வேலையா வேலையிலே கண்ணிருக்கு-சுப்பையா வேலிஓரம் போகுதுபார்-வேலையா •. வேட்டித்துணி போட்டிருக்கோ-சுப்பையா சித்தாடை கட்டிருக்கு-வேலையா சின்னக்குட்டி போலிருக்கு-சுப்பையா கண்ணுடி தோற்குமடா-வேலையா கண்ணப் பறிக்குதோடா-சுப்பையா கொண்டையிலே பூவிருக்கு-வேலையா கொளச்சுமுடி போட்டிருப்பா-சுப்பையா காத்தெனவே பறந்துவாரா-வேலையா கஞ்சிகொண்டு வாராளோடா-சுப்பையா கதிரரிவாள் இருக்குதடா-வேலையா கதிரறுக்கும் காலமல்ல-சுப்பையா ஆட்டுத்தழை அறுப்பாளடா-வேலையா அண்டையிலே வந்துட்டாளோ-சுப்பையா அன்னம் போலே முன்னேவாரா- வேலையா அவள் என் - அத்தைமவ ரத்தினம்டா-சுப்பையா அவள் உரிமையுள்ள புருசனும் கீ-வேலையா அடுத்த மாசம் பரிசம் வைப்பேன்-சுப்பையா 1,

"இக்கப் பாட்டை உதவியவர் : திரு. சி. ரா. கோபாலன், கும்பகோணம்.