பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமபாணம்

ராமாயண பாரதக் கதைகள் இத்தனை விதமாகத். தான் இலக்கியத்தில் புகுந்துகொண் டிருக்கின்றன என்பதற்கு அளவே இல்லை. காவியமானலும் சரி, பிரபந்தமானலும் சரி, தோத்திரமாஞலும் சரி, சாத்திரமானலும் சரி - எல்லாவற்றிலும் ராமனும் கண்ணனும், வீமனும் அருச்சுனனும் உலா வருகிருர் கள், சங்கீதத்தில், சிற்பத்தில், பரதநாட்டியத்தில் கண்ணனுடைய லீலைகளையும், ராமனுடைய வீரச் செயல்களையும் விலக்கி விட்டால் அந்தக் கலைகள் ஜீவ னற்று ஒளியிழந்து சோரும் என்று சொல்வதில் தவறு: ஒன்றும் இல்லை. பாரத பூமியினது மண்ணின் சாரத் தோடு இந்த இதிகாசக் கதைகள் கலந்து செடியாகவும். கொடியாகவும் மரமாகவும் பூம்பொழிலாகவும் பரிண: மித்து வளர்ந்தோங்கி நிற்கின்றன.

ராமனுடைய பெயரைச் சொன்னலே அழகு தானுக வந்துவிடுமோ என்னவோ வடமொழியிலே காவிய ருசி நிரம்பி நிற்கிறது. வால்மீகி ராமாயணம் என்ருல், தமிழிலேகூடக் கம்பர் பாடிய ராமகதைக் குத்தானே புலவர்களெல்லாம் சேர்ந்து மணிமுடி சூட்டுகிருர்கள்? ஹிந்தி மொழியிலே துளளிதாஸர் பாடிய ராம சரிதத்திற்கு உள்ள பெருமதிப்பை அளவிட φρις «μοπ" -

- படித்த புலவர்களும், கவி பாடும் கவிஞர்களும் ராம கதையிலே மகிழ்ந்து போகிருர்கன் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அரிச்சுவடியைக் கையால் தொட்டும் பாராத நிரட்சர குட்சிகள், சோற்றுக்குத்