பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாடோடி இலக்கியம்

திண்டாடிப் புலைத்தொழில் புரிந்து வயிறு வனர்க்கும் மக்கள், காட்டுமிராண்டிகளென்று நாகரிக மக்கள் நாமகரணம் செய்யும் பூர்வகாலக் குடிகளின் பரம்பரை யினர் இவர்களிடையேயும் ராமனது பிரபாவம் பரவி யிருக்கிறதுதான் பெரிய ஆச்சரியம். பாரத தேசத்தில் ஒவ்வொரு பாஷையிலும் ராமாயணம் இருக்கிறது. ராமாயணத்திற்கு இலக்கிய உலகில் ஒரு சிறந்த இடம் எங்கும் உளது. அப்படியே பல பாஷைகளிலும் உள்ள நாடோடி இலக்கியத்திலே ராமனுடைய புகழ் பரவிக் கிடக்கிறது. . * -

தமிழில் ஏற்றப்பாட்டிலும் தாலாட்டிலும் குழந்தை விளையாட்டிலும் வேறு வகையான கிராமப் பாடல்களிலும் ராமாயணத்தின் நறுக்குகளைப் பார்க்க லாம். ராமாயணப் பூம்பொழிவில் பறித்துக் கொண்ட இதழ்கள் அவை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லா மல், முன் பின் தொடர்ச்சியும் முறையும் இல்லாமல் ராமனுடைய பெயரையும் வீர விளையாட்டையும் பின்னிப் பிணைத்துப் பாடும் நாடோடிப் பாடல்கள் பல.

懿 壽 華 永

ராமபாணத்தின் பெரும்ையை இலக்கியத்தில் பல பல இடங்களில் பல பல உருவத்தில் நாம் வாசிக் கிருேம். ஒரே சமயத்தில் பல இலக்குகளை ஊடுருவிச் செல்லும் ராமபாணத்தின் ஆற்றலைக் கம்பர் எவ்வளவு இடங்களில் எவ்வளவு நயமாக வருணிக்கிருர்! * ×

'உலயுருவக் கனல் உமிழ்கண்தாடகைதன் உாமுருவி மலையுருவி மரமுருவி மண்ணுருவிற் ருெருவாளி'

TTDI விசுவாமித்திரர் கூற்ருக வைத்துப் பால காண்டத்திலேயே ராம பாணப் பிரபாவத்தை ஆரம்பித்துவிடுகிரு.ர். அந்த அம்பின் திறமையை