பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமபாணம் 2 so,

உணர்ந்த தமிழர்கள் பல ஏடுகளை ஒருங்கே துளைத் துச் செல்லும் ஒரு பூச்சிக்கு ராமபாணம் என்ற பெயரையே வைத்துவிட்டார்கள். நூற்றுக்கணக்கான ஏடுகளை ஒரே மாதிரி துளைத்து ஊடுருவிச் செல்லும் அந்தப் பூச்சிக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கிறதென்று அவர்கள் நினேத்தார்கள். .

"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழி எப்படி வந்தது? எண்ணிப்பா ருங்கள். கா கr சுர்’ வதத்தில் ராமபிரான் ஒரு துரும்பைக் கிள்ளிப் பாண மாகப் பிரயோகித்தார் அல்லவா? அந்தப் புல்லே பாணமாகிக் காகாசுரனைப் படாத பாடு படுத் தின கதை யிலிருந்துதான் அந்தப் பழமொழி பழுத்து வந்திருக் கிறது. . - .

ராமபாணம் பெரிய காரியங்களை யெல்லாம் சாதித்தது. சிறிய காரியத்திற்காகப் பெரிய கருவியை உபயோகித்தால், சிட்டுக்குருவிக்கு ராமபாணமா?’ என்று பழமொழி சொல்விப் பரிக சிப்பது நம் நாட்டார் வழக்கம். குருவிக்கேற்ற ராமசரம்' என்று மற்ருெரு பழமொழியும் உண்டு. இப்படிப் பெயரிலும் பழமொழிகளிலும் ஒளிரும் ராமபாணம் நாடோடி இலக்கியத்திலே விளங்கும் விதத்தை இரண்டு உதாரணங்களிலே பார்க்கலாம். o: . .

குழந்தைகளுக்கு வார் த் தை க ள க் கற்றுக் கொடுக்கும் தாய்மார்கள் அதற்கென்று சில பாட்டு க் களைச் சொல்லித் தரு வார்கள். அந்தப் பாட்டிலே பொருள் தொடர்போ, அபூர்வமான கருத்தோ இருக்க வேண்டும் என்பது அவசியமன்று. வார்த்தைகள் குழந்தை களின் நாவிலே புரளவேண்டும் என்பதுதான் அவர்கள் கருத்து. இந்தக் காலத்திலே அந்த வார்த்தைகளை அச்சிட்டுப் பக்கத்திலே படம் போட்டுப் பாட புத்தகம்

ஆக்கிக் குழந்தைகள் கையில் கொடுக்கிருர்கள்.