பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நாடோடி இலக்கியம்

குழந்தைகளுக்கு முதல் முதலில் உபாத்தியாயராக இருப்பவள் தாய்தான். அவள் குழந்தைக் குப் போதிக்கும் கல்வி, என்றும் மறவாத வண்ணம் மனத்திலே பதி கிறது. ள கார ணகாரங்களைக் குழந்தைகள் நாக்கு நுனியை மடித்துச் சுருட்டிச் சொல்லவேண்டி யிருப் பதால் சிறிது சிரமம் உண்டாகும். சிரமம் தோன்ருமல் அந்த இரண்டு எழுத்தும் வரும்படியான வார்த்தைகளே ஒரு பாட்டிலே வைத்துக் கோத்துச் சொல்லிக் கொடுப் பது பழங்காலத்துத் தாய்மார்களின் வழக்கம்,

கும்ப கோணமே கோணம் குறவன் கட்டதே சோளம் ராமர் விட்டதே பாணம்-அது எங்கே போச்சுதோ காணம்

என்று பாட்டாக வருகிறது. தாய் மாரின் போதனை. 3 கானம், சோளம், பாணம், காணம் என்ற வார்த்தை கள் ஒவ்வோரடியின் இறுதியிலும் பொருந்திப் பாட்டின் தாளத்தோடு ஒன் ருகி ஒலித்துக் குழந்தைகளுக்கு உற்சாகத்தை உண்டாக்குகின்றன. முதல் இரண்டடியிலே உள்ள கும்பகோணத்திற்கும், குறவன் . தட்ட சோளத் - திற்கும் அர்த்தத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனல் பின் இரண்ட்டியிலும் அர்த்தம் தொடர்ந்து வருகிறது. சொற்பழக்கத்தோடு தாய், குழந்தைக்கு ராமபாணத் தின் பெருமையையும் உணர்த்துகிருள். ராமபாணம் அதன் உள்ளத்திலே இனிமையாகப் பதிகிறது.

  • # - 锋 #

ஏற்றப்பாட்டு ஒன்று ராமபாண் மகிமையைச் 'சொல்கிறது. அந்தப் பாணம் இடியைப்போல இடித்து வருமாம்; காற்றைப்போலக் கடுகி வருமாம்; மழையைப் பேர்வத் தொகை தொகையாக வருமாம். இப்படி வெளிப்படும் பாணத்தை ராமன் பூட்டும்போது