பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமரசப் பாட்டு - 29

இன்னும் பார். ஏற்றக்காரனுடைய அபேத புத்தியைக் கண்டு சபாஷ் போடப் போகிருய். அவன் இப்போது ஜைனர் கோயிலுக்கு நம்மை இழுத்துப் போகிருன். பிரதட்சிணம் செய்யச் சொல்கிருன். அருகர் கோயிலை வலம் வந்தால் கோடி பலன் உண்டாம்: அதிகச் சம்பத்து உண்டாம். நல்ல பலன் உண்டாம். ஒரே விஷயத்தை ஒரு தடவை அல்ல, பத்துத் தடவை சொல்லிச் சொல்லி அதைப் பாட்டாக்குகிருன். பாட் டென்று நீ நினைக் காவிட்டால் மந்திரமென்று நினைத்துக் கொள். மந்திரத்தைத்தானே பலமுறை உருவேற்ற வேண்டும்? பாட்டிலே பல்லவியும் ஜபத்திலே மூலமந் திரமும் திருப்பித் திருப்பிச் சொல்வதனல் அதிக இன் பமும் அதிக நன்மையும் அளிக்கின்றன. எங்கே? ஏற்றக் காரனைப் பின் தொடர்வோம்:

இனிஅருகர் கோயில் வலம்வருவோம் வாங்க பொன்னருகர் கோவில் போய்வருவோம் வாங்க கோயில்வலம் வந்தால் கோடிபலன் உண்டு அருகர்வலம் வந்தால் அதிகசம்பத் துண்டு நாதர்வலம் வந்தால் நல்லபலன் உண்டு ஸ்வாமிவலம் வந்தால் சற்றுங்குறை வில்லை.

இந்தச் சமரசம் அவனை முறை தெரியாமல் அடித்து விடுகிறது. முருகனைப் புகழ்கிருன் அடுத்த அடியிலேயே நாராயணனுக்கு நமஸ்காரம் பண்ணுகிருன் வள்ளி, யையும் முருகனையும் காட்டில் கொண்டு வந்து நிறுத்து கிமு ன். அப்படியே அவர்களை விட்டு விட்டு ராமரை அழைத்து வந்து அவர் வனவாசம் செய்ததை நினைத்து

இரங்குகிருன். . . .

முருகருக்கோ வள்ளி மோகனப்பெண் ஆளுள் கந்தருக்கோ வள்ளி கானமயில் ஆளுள் வேலருக்கோவள்ளி வேடிக்கைப்பெண் ஆளுள்