பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாடோடி இலக்கியம்

துரியோதனன் பஞ்சபாண்டவர்களைக் காட்டுக்குஒட்டின்வன். இதை ஒரு தரம் சொன்னல் போதாதோ' எத்தனை தரம் சொல்கிருன் நாடோடிப் பெளராணிக்ன்? பாண்டவர்கள் ஐவரையும் பரதேசம் ஒட்டினனே மன்னவர்கள் ஐவரையும்

வனம்ஒட்டி விட்டானே காவலர்கள் ஐவரையும்

காட்டிற் செலுத்தினனே உத்தமர்க ளைவரையும்

ஊரைவிட் டோட்டிவிட்டான் ஜவரையும் ஒட்டிவிட்டான் - ஆளுகின்ருன் படுபாவி! - ஐந்து பேர்களையும் ஒட்டினதற்காக ஐந்து தடவை திருப்பித் திருப்பிச் சொல்ல எண்ணினனே என்னவோ! புருஷனில்லா மங்கையர்கள் - பூவையர்கள் இத்தனைபேர்

ஆளனில்லா மங்கையர்கள்

அரிவையர்கள் இத்தனைபேர் கணவனில்லா மங்கையர்கள்

காரிகைமார் இத்தனைபேர் சிறையிலிருந்து வாடுகின்ற செய்தி தெரியவேண்டும் பல தடவை அடுக்கிச் சொன்னுல்தான் சொல்ப வனுக்கும் திருப்தியாகிறது: கேட்கிறவனுக்கும் உறைக் கிறது. , - - . -