பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதம்பம் .35。

இந்த லட்சணத்தை ஏற்றப்பாட்டிலும் பார்க்தலாம். ஏற்றத்தில் சாலேத் தொங்க விடுவதற்கு மூங்கிற்கோல் வேண்டும். அந்தக் கோல் நல்ல உறுதியாக இருக்க வேண்டும். நன்ருக விளைந்ததாக இருந்தால் சாலின் பாரத்தைத் தாங்கும். கிணற்றின் ஆழத்திற்கு தக்க படி கோலின் நீளத்தை அமைத்துக்கொள்வார்கள். அப்படி உள்ள மூங்கிற்கோலின் பிறப்பிடத்தைப் பாட்டிலே சொல்கிருன் ஏற்றக்காரன்.

எட்டடிக்குக் கோலு எடக்கிநாட்டு மூங்கில் பத்தடிக்குக் கோலு பவழக்காட்டு மூங்கில் அஞ்சடிக்குக் கோலு அழகிநாட்டு மூங்கில் கிணறு வெட்டியதும் துலாம் நாட்டியதும் மட ல் அமர்த்தியதும் பாட்டில் வருகின்றன.

எட்டடி அளந்து-வெட்டினன் துரவே பத்தடி அளந்து பாச்சின்ை துலாத்தை அஞ்சடி அளந்து அமர்த்தின்ை மடலே எட்டடிக்குக் கோலு எடக்கி நாட்டு மூங்கில் பத்தடிக்குக் கோலு பவழக்காட்டு மூங்கில் அஞ்சடிக்குக் கோலு அழகிநாட்டு மூங்கில் எட்டடியுங் கோலும் விட்டாடுமோ பான பத்தடியும் கோலும் பன்னடுமோ ஏத்தம் ஏத்தங்களைப் பார்ததால் எமன்செட லாட்டம் உபயகதி வாழ ஒருபதியா லொண்ணு. இந்த வருணனையில் நமக்கு எல்லாம் தெளிவாகப் புரியும் என்று சொல்வதற்கில்லே. அவன் சொல்லுகிற கணக்கு, சரியான நிதானத்தின் மேல் சொல்வதென்று கொள்வதும் அவசியமன்று. பாட்டுப் போகித போக்கிலே சிறிது பொருத்தமுள்ள விஷயங்களும் வார்த்தைகளும் அவனுக்கு அகப்படுகின்றன. அவற்றை