பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதம்பம் 3Ꮘ

ஒன்றை விட்டு ஒன்று பற்றி ஏற்றப்பாட்டு உருவெடுக் கிறது.

சடையாண்டியின் கோலத்தை அவன் அழகாக வருணிக்கிருன். அவர் நீறு பூசிக் கபாலம் கையிலேந்தி மான்தோலும் புலித்தோலும் பிற தோலும் புனைந்து வருவதை,

தொங்கும் சடையாண்டி எங்கும் வருவாரோ நீறுபூசும் ஆண்டி கித்தம் வருவாரோ சங்குகையி லேக்திச் சாரி வருவாரோ பாலங்கையி லேந்திப் பாடிவருவாரோ அன்றுரித்த மான்தோல் ஆதனம் புலித்தோல் நேற்றுரித்த மான் தோல் கித்தமும் கரித்தோல் கன்றுரித்த மான்தோல கரடிமான் புலித்தோல்

என்று சித்திரிக்கும்போது சிவபெருமானை எத்தனை விதமான தோலாண்டியாகப் பார்க்கிருேம்:

மார்க்கண்டேய புராணத்தை அவன் தன்னுடைய பத்துச் சாலாலே அளந்துவிடுகிருன்: -

ம்ருகண்டரைப் போலத் தவம்பண்ணவர் இல்லை ம்ருகன: டரிஷிக்கு முன்னேரிட்ட சாபம் பிள்ளையில்லை யென்று பெருந்த வங்கள் செய்தார் மைந்தனில்லை யென்று மாளாத்தவம் செய்தார். ம்ருகண்டு ரிஷிக்கு மார்க்கண்டர் பிறந்தார் மார்க்கண்ட ரிஷிக்கு வயசு பதினறு வரமளித்தார் ஸ்வாமி என்றும்பதி ஞருய் ஈரெட்டு வய சாய் ஈசுவரரும் தந்தார் மார்க்கண்டனு மப்போ ஆற்றுமணல் சேர்த்து ஹரனப்பூஜை செய்து ஈசுவரனப் பார்த்தார்