பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னு ைர

ஒரு நாள் என் நண்பர் கா. பூநீ. ரீ. என் வீட்டுக்கு வந்தார். அவசர அவசரமாக, “உங்களைப் பார்க்க டாகுர் வந்திருக்கிருர்; வாருங்கள்” என்று அழைத்தார். "டாகுராவது! வரவாவது! ஏதோ புரளி பண்ணுகிருர்’ என்று நான் நினைத்தாலும், அவர் ஏன் அப்படிச் சொல்லு கிருர் என்பது விளங்கவில்லை. எழுந்து சென்று வாயிலுக்கு வந்தபோது ஆஜானுபாகுவான ஒருவர், கரு கரு வென்ற தாடியோடு நெடுஞ்சட்டை அணிந்துகொண்டு கின்ருர். கா. ரீ. ரீ. அவரை எனக்குப் பழக்கம் செய்துவைத்தார். அவரது தாடியும் உயர்ந்து வளர்ந்த உருவமும் மகாகவி ரவீந்திரரை கினைப்பூட்டின; அதல்ை தான் அவரை டாகுரென்று கண்பர் சொல்லி என்னைப் பிரமிக்க வைத்தார். உருவ ஒற்றுமையோடு, ஒரு லட்சியத்துக்காக வாழ்க்கையை நடத்தும் வகையிலும் அவ்விருவரிடையேயும் ஒற்றுமை இருந்தது.

அந்த ஆஜானுபாகுவே ரீ தேவேந்திர ஸ்த்யார்த்தி

என்பவர். இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து காடோடிப் பாடல்களைத் தொகுப்பதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட பெரிய நாடோடி அவர். பஞ் சாப்பில் பிறந்து வளர்ந்து கல்வி பயின்ற காலத்திலேயே காடோடிப் பாடல்களில் அவர் உள்ளம் ஆழ்ந்துவிட்டது. தாய் தகப்பளுருக்குத் தெரியாமல் பள்ளிக்கூடத்தை விட்டு ஓடிவிடுவாராம். நாடோடிப் பாடல்களில் மனம் புதைந்து போய் ஆட்டிடையனையும் குடு குடுப்பாண்டியையும் ஏற்றக்காரனையும் தேடியடைந்து அவர்கள் பாடும் பாடல் களைக் கேட்டு நிற்பாராம். அக்காலம் முதல் இன்றளவும் இயற்கையோடு ஒன்றியெழும் கிராம கீதங்களைத் தொகுப் பதையே சிறந்த பணியாகச் செய்துவருகிருர்.