பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

'காடோடிப் பாடல்களுக்காக வாழ்க்கை முழுவதையும் செலவிட வேண்டுமா, என்ன? என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும்._தேவேந்திர ஸத்யார்த்தியோடு ஒரு நாள் பழகிப்பேசி இருந்தால், இந்திய நாட்டில் புதைப்ொருளாக, மறைந்த களஞ்சியமாக உள்ள நாடோடிப் பாடல்களை அநுபவிப்பதற்கும் தொகுப்பதற்கும் ஒரு பிறவியல்ல, பல பிறவிகள் வேண்டியிருக்கும் என்பதைத் தெளிவார்கள். ரவீந்திரநாத டாகுரும், மகாத்மா காந்தியடிகளும் இந்த நாடோடியின் தொண்டை வியந்து பாராட்டி யிருக்கி ருர்கள்.

1940 - ஆம் வருஷம் ஸத்தியார்த்தியவர்கள் தமிழ் காட்டுக்கு வந்து ஐந்து மாதங்கள் பிரயாணம் செய்தார். சென்னையில் தங்கியிருந்த காலத்தில் அவரோடு பல முறை சந்தித்துப் பேசிப் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்னுடைய ஆசிரியராகிய மகாமகோ பாத்தியாய டாக்டர் ஐயரவர்களை அவர் கண்டு தம் கைங்கரியத்தைப் பற்றிச் சொன்னர். மங்கி மடிந்து கொண்டிருந்த இலக்கியச் செல்வத்தைத் தொகுத்துப் பண்படுத்தி வழங்கிய அப்பெருவள்ளல் ரீ ஸ்த்தியார்த் தியின் தோற்றத்தில், அவருடைய ஒளி வீசும் கண்களில், அவர் பேசும் வெண்கலத் தொனியில், காட்டிய ஆர்வத்தில், சொன்ன விஷயங்களில் ஒன்றிப் போனர். அந்த அந்த காட்டில் பாடல்களைத் திரட்டுவத்ற்குக் கால்நடையாக கடந்தும் பட்டினி கிடந்தும் காடும் மலையும் கடுகி வழிநடந்தும் அவர் பட்ட பாடுகளைக் கேட்கக் கேட்க என் ஆசிரியப் பிரானுடைய உள்ளம் உருகியது. "ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை, பூசாரி பாட்டுக்குப் பின் பாட்டில்லை என்ற பழமொழி தமிழ் நாட்டில் உண்டு. பெண்மணிகள் குழந்தைகளைத் தாலாட்டும் போதும், துக்கத்தில்ை ஒப்பாரி வைத்து அழும்போதும் அவர்களிட மிருந்து வெளியாகும் பாடல்கள் உணர்ச்சி மயமாக இருக்கும். தொழிலாளிகள் பாடும் பாடல்கள் தமிழில்