பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v,

கணக்கு வழக்கில்லாமல் இருக்கின்றன. நீங்கள் நல்ல காரியம் செய்கிறீர்கள்’ என்று பாராட்டினர். 'என் முயற்சி கல்ல பயனை அடையும்படி ஆசீர்வாதம் செய்யுங் கள்’ என்று நாடோடி ஸத்தியார்த்தி வேண்டிக்கொண்டு ஆசியையும் பெற்ருர்.

நாடோடிப் பாடல்களை வெளியிடும் விஷயத்தில் கலைமகள் ஓரளவு தொண்டு செய்த பெருமைககு உரியது. கலைமகள் ஆரம்ப இதழ்களில் சில பாடல்கள் வெளியாயின. அவற்றையும் நான் தொகுத்து வைத் திருந்த சில பாடல்களையும் ஸத்தியார்த்தியவர்களிடம் காட்டினேன். அவர் சிலவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொண்டார்.

அக்காலத்துக்கு முன்பே நாடோடிப் பாடல்களில் ஓரளவு ஈடுபாடு எனக்கு இருந்தாலும், ஸ்த்தியார்த்தி யோடு பழகியதல்ை அந்த ஈடுபாடும், தமிழ் ந்ாடோடிப் பாடல்களைத் தொகுக்க வேண்டுமென்ற ஆர்வமும் மிகுதி யாயின. ஸத்தியார்த்தியவர்கள் இத்துறையில் புகுந்து உழைக்கும்படி ஊக்கமூட்டினர். அது முதல் நான் செல் லும் இடங்களில் உள்ளவர்களின் மூலமாகவும். நண்பர் களின் மூலமாகவும், பாடல்களைத் தொகுக்கலானேன்.

எத்தனையோ வகையான பாடல்கள் தமிழ் நாட்டில் உலவுகின்றன. தொழிலாளிகள் தங்கள் தொழில் சம்பந்த மாகப் பாடும் பாடல்கள் பல; தங்கள் சிரமத்தைப். போக்கிக்கொள்ள ஆனந்தமாகப படும் கீதங்கள் பல, சிறுவர் சிறுமியர் விளையாடும்போது பாடும் பாடல்கள் பல; தாய்மார்கள் குழந்தைகளைத் தாலாட்டிச் சீராட்டி முத்தாடிச் சோறுாட்டி நிலாக் காட்டும் போது பாடும் இன்பப் பாடல்கள் பல; கதைகளை விளக்கும் பாடல்கள் பல. இப்படிப் பலபல திறங்களில் மலர்ந்துள்ள நாடோடி இலக்கியத்தில் எந்தச் சுவை இல்லை? காதல் இல்லையா?