பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

வீரம் இல்லையா? நகைச்சுவைக்குத்தான் குறைவா? இலக்கியச் சுவைக்குப் பஞ்சமா? மனித உணர்ச்சிகளை எவ்வளவு அழகாக, தெள்ளத் தெளிய அவை எடுத்துக் காட்டுகின்றன! கரடு முரடான உள்ளத்தை உருக்குவன சில பாடல்கள் குழந்தைகளின் உள்ளத்தில் குதூகலத் தைப் புகுத்துவன சில; சோகத்தில் மூழ்கச் செய்வன சில.

தமிழ் நாட்டில் மனிதன் நடமாடத் தொடங்கிய கால முதல் இந்தப் பாடல்கள் பிறந்து வளர்ந்து வரு கின்றன. பரந்த தமிழ் நாட்டின் மூலே முடுக்குகளிலும், வயல் வெளிகளிலும், வீடுகளிலும், வீதியிலும் உலவும் இவற்றைத் தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் நாம் இன்னும் சிரத்தை கொள்ளவில்லை. ஹிந்தி முதலிய மொழிகளில் நாடோடிப் பாடல்களைத் தொகுத்து வெளியிட் டிருக்கிருர்கள். தமிழ் நாட்டில் பாடல்களுக்குப் பஞ்சமே இல்லை. இட்போது முயன்ருலும் லக்ஷம் பாடல்களுக்குக் குறையாமல் சேர்க்கலாம். இயற்கை வாழ்வினின்றும் விலகி கிற்கும் நாகரிகத்தில் தலைப்பட்டிருக்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை பெருமைகள் தெரிவதில்லை. நாடோடிப் பாடல்களைப் பாடுவாரும் வரவரக் குறைந்து கொண்டே வருகிருர்கள். எனவே, இதுதான் நாடோடிப் பாடல்களைச் சேகரிக்க நல்ல தருணம். நாளாக ஆக இப் போது கிடைக்கும் பாடல்கள் மறைந்து போய்விடும்.

இப்பாடல்களை அப்படியப்படியே சொல்வதைவிட ஒரு நிலைக்களத்தை அமைத்துப் பொருத்திக் காட்டினல் தமிழ் காட்டார் அவற்றில் ஈடுபடுவார்கள் என்று எண்ணினேன். இலக்கியத்தோடு ஒப்பிட்டு இவற்றி னிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமை நயங்களை எடுத்துக் காட்டவேண்டுமென்பது என் அவா. அந்த அவா உருவாகி இக்கட்டுரைகளாக வந்திருக்கின்றன. இவை 'சுதேசமித்திரன்’ வாரப்பதிப்பில் வெளிவந்தவை: அங்கங்கே சில சிறு மாற்றங்கள் மாத்திரம் செய்திருக்கி