பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எப்போ மழை பெய்யும்!” 4

சோறு கிடையாது சோழனது சீமையிலே எல்லோரும் பரதேசி ஏழைகளாய்ப் போனர்கள் மாடு கிடையாது மனிதருங் கிடையாது தங்கநிழல் கிடையாது தரித்திரமே பெரிதாச்சு. -- (அல்லியரசாணி மாலை) ஒரு நாடு முழுவதும் பஞ்சம் வந்து விட்டபோது அங்குள்ள நிலையை இந்தக் கண்ணிகளில் காண் கிழுேம். ஏற்றக்காரன் பாட்டில் மழையில்லாப் பஞ்சத்தில் அவன் சொல்லும் பகுதி ஒன்று வருகிறது. 'எப்போது மழை பெய்யும்!” என்று அவன் ஏங்குகிருன். மழைபெய்தால் பயிர் விளையும்:- பயிர் விளைந்தால் ஒடிப் போன குடி களெல்லாம் வந்து சேருவார்கள். மழைபெய்தால்தான் நிலம் சொன்னது சொன்னபடி விளை யும். நீர் வளம் இருந்தால்தான் நிலவளமும் உண்டாகும். நெல்விளையும்:கரும்பு விளையும்; வெற்றிலே விளையும். வளம் நிறைந்து நிற்பதற்கு அறிகுறி வெற்றிலே. இப்படி விளைந்தால்தான் ஜனங்களுக்கு இன்பம் உண்டாகும்; அன்பு சுரக்கும்: தெய்வங்களுக்குப் பூசை போடுவார்கள் - இவ்வள்வு விஷயங்கள்ை யும் அவன் ஒருவாறு சொல்லிவிடுகிருன்,

எப்போமழை பெய்யும் குப்பம்பயிர் ஏறும் குப்பம்பயிர் ஏறும் குடிகள்வந்து சேரும் கற்பூரம் விளையும் காலமழை பெய்யும் சொன்னது விளையும் சோதிமழை பெய்யும் வெற்றிலை விளையும் வேணமழை பெய்யும் வேணமழை பெய்யும் விடியபூஜை ஆகும். சொன்னது விளையும் சொர்ணபூசை ஆகும். தொழுதேன் பகவானே தொண்ணுறுடன் ஒண்னு - வேண. 8 6p பெய்தால் விடியல் பூஜை ஆகும். என்று ஏற்றக்காரன் தான் பழகுந் தமிழிலே சொல் கிருன் அதையே திருவள்ளுவர். - :