பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9) புத்திர டாக்கியம்

ஒரே ஒர் ஊராம்: அந்த ஊருக்கு ஒரு ராஜாவாம். அந்த ராஜாவுக்கு அழகான ராணியாம்: இரண்டு. பேருக்கும் பிள்ளையே இல்லையாம். அதனல் பகவான நோக்கித் தபசு பண்ணிஞர்கள். ஆயிரங்காலம் தபசு பண்ணின பிறகு பகவானுடைய அருளிளுலே ஒரு குழந்தை பிறந்தது' என்று இப்படிக் கதைகளை ஆரம் பிக்கிறது நம்முடைய நாட்டுச் சம்பிரதாயம். நல்ல பிள்ளை பெறுவதற்குக் கடவுள் திருவருள் மிகவும் அவசியம் என்ற கொள்கை ஒருபுறம் இருக்க, வாழ்க்கை யிலே இன்பத்தைப் பூர்த்தி செய்வதற்குக் குழந்தைகள் வேண்டுமென்ற எண்ணம் நம்முடைய தர்ம தேசத்திலே தொன்று தொட்டே இருந்துவருகிறது. எந்த மொழியிலே யானலும் சரி, இலக்கியங்களெல்லாவ் ற் றிலும் இந்தக் கொள்கையைப் பல பல இடங்களிலே, பல பல விதமாகப் பார்க்கலாம். நல்ல மனைவி வாய்த்தால் அவள் வீட்டுக்கு மங்கலம்; நல்ல பிள்ளை உண்டாளுல் அந்தக் குழந்தை அவர்கள் வாழ்வுக்கே அணிகலம்' என்று திருவள்ளுவர் சொல்கிரு.ர். தசரதர் முதலியவர்கள் L3Girడిr வேண்டுமென்று தவம் செய்ததும் யாகம் செய்ததும் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் இந்த நாட்டில் உலவுகின்றன.

பிள்ளையில்லாதவர்கள் செய்யும் தான தருமங்கள்

இன்றளவும் இந்தத் தேசத்தில் அளவிறந்துள்ளன. செல்வத்தின் தகுதிக்கு ஏற்ப அந்த் அறச் செயல்கள் பெருகுகின்றன. - - -

சேராம்பூ ராசாக்கள் பிள்ளையில்லை என்று செய்த தருமத்தை நாடோடிப் பாவலன் சொல்லுகிருன்: