பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芬4

நாடோடி இலக்கியம்

கண்டகண்ட கோவிலெல்லாம்

கையெடுத்துக் கும்பிடுவார்;

காணுத கோவிலுக்குக்

காணிக்கை அனுப்பிவைத்தார்;

இலையிலே சாதமுண்டால்

என்ன தவம் என்றுசொல்லித் தரையை அவர்மெழுகிச்

சாதங்கள் உண்டார்கள்; பாலடைக்குப் பால்கொடுப்பார்,

பசித்தார் முகம்பார்ப்பார்; தவித்துவந்த பேர்களுக்குத்

தண்ணீர் கொடுப்பார்கள்; சாலைகள் போட்டுவைத்தார்,

சத்திரங்கள் கட்டிவைத்தார்; நல்லதண்ணீர்க் கிணறுகளும்

கடைவாவி கட்டி வைத்தார்; அந்தணர் பிராம்மணர்ச்கு

அக்ரகாரம் கட்டிவைத்தார்; தேசபர தேசிகட்குத்

திருமடங் கட்டிவைத்தார்; குளங்களை வெட்டிவைத்தார்,

கோபுரமுங் கட்டிவைத்தார்: என்ன தவம் பண்ணிலுைம்

எதஞலும் பிள்ளையில்லை; பெருமையாய்ப் பத்தாண்டு

பெய்த பெருமழைக்குத் தெப்பமாய் மிதந்துகின்று

சேர்ந்துதலம் பண்ணிஞர்கள்: