பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O

பொங்கல் பாட்டு

அம்மாயி அம்மர்யி

ஏண்டி ஏண்டி அம்மாயி தையும் பிறந்தது

தரையும் குளிர்ந்தது

தைமாதப் பெண்கள் எல்லாம்

தட்டாப் புறப்பட்டார் கொட்டாப் புறப்பட்டார்

அம்மாயி அம்மாயி!

"தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. உழுது ப ர ம் படி த் து விதை தெளித்துக் களை பிடுங்கி எரு விட்டுப் பாதுகாத்த பயிர்கள் விளைந்து முற்றி நிற்கின்றன. அவற்றை அறு வடை செய்து வீடு நிறையக் கொணர்ந்துவைத்து மகிழ், கிருன் குடியானவன். -

வாழ்வுக்கும் சாவுக்கும் தை மாதம் இனிமையை ஊட்டுகிறது. ஆம், கல்யாண நாள், தை முதல் தேதியில் தொடங்குகிறது. பழுத்து உலர்ந்து போன கிழங் கட்டைகள் எங்கே தம் உயிருக்குத் தகழிஞயனத்திலேயே யமன் ஒலை அனுப்பி விடுவானே என்று உத்தராயணத்தை எதிர்பார்த்து நிற்கிருர்கள். பீஷ்மர் பாரத யுத்தத்தில் பட்டுக் கிடந்தபொழுது தைமாதப் பிறப்பை எதிர் நோக்கிப் போகிற உயிரைத் தாங்கி அம்புப்படுக் கையிலே தவம் புரிந்து கிடந்தாரென்று வாசிக்கிருேமே!

தைப் பொங்கல் நிறைவுக்கு அறிகுறி: பசியும் நோயும் பறந்து சென்றன என்ற இன்பத்துக்கு அடை