பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நாடோடி இலக்கியம்

யாள நாள். விடெல்லாம் விளக்கிச் சுண்ணும்பும் செம்மண்ணும் இட்டு அழகு பண்ணுவது நம் நாட்டவர் வழக்கம். தேவர்களுடைய பகல் தை மாதத்திலே தொடங்குகிறது.

வேளாண்மையைச் செல்வமாகக் கொண்ட இந்த நாட்டிலே தெல்லும் கரும்பும் நிலத்துக்குப் பெருமை தருகின்றன. பு ல வ ர் க .ெ ள ல் லா ம் நிலவளத்தைச் சொல்லும் பொழுது நெல்லையும் கரும்பையும் நிறைத்து வைக்கின்றனர். நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்' என்று ஒருவர் பாடுகிரு.ர்.

நிலவளம் படைத்த தமிழ் நாட்டில் நெல்லும் கரும்பும் நிறைந்த நாள் தைப் பொங்கல். புது நெல்லைக் குத்திய அரிசியையும், விளைந்த கரும்பை ஆலையிலிட்டுச் செய்த வெல்லத்தையும் கொண்டு பொங்கலிட்டுக் களிக் கிருன் தமிழன். அவனுடைய நிலம் வளம் பெற்ற தென்பதை அந்தப் பொங்கல் சொல்லுகிறது. தன் நிலத்திலே விளைந்த நெல்லும் கரும்பும் தன் மனையிலே வளரும் பசுவின் பாலும் அவனது மனையிலும் மனத் திலும் இன்பப் பொங்கலை உண்டாக்குகின்றன. -

அவன் பொங்கலைப் படைத்துச் சூரியனை வணங்கு கிருன் சூரியன் இல்லாவிட்டால் ஒளி ஏது? உயிர் ஏது:

சந்திரனையும் சேர்த்து வழிபடுகிருன். பயிர் வின் வதற்குச் சந்திரனுடைய அமுத கிரணங்கள் உதவு கின்றன. தமிழ் நாட்டு மகளிர் அவனே எரு விட்டு வழி படுத்ல் பழைய காலத்து மரபு.

சூரியனையும் சந்திரனேயும் வணங்கும் இந்த வழக் கத்தைச் சிலப்பதிகாரமென்னும் அரிய தமிழ்க் காவி யத்திலே காணலாம். ஒளியால் உலகை எழுப்பும் சூரியனும், தண்மையால் உலகுக்குச் சாந்தியைத் தரும் சந்திரனும் கண்கண்ட தெய்வங்கள், !