பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் பாட்டு 6 :

பொங்கற் புது நாளில் தமிழ் மக்கள் களி துளும்பும் முகத்துடன் கடவுளே வழிபட்டுப் பொங்கல் விருந்து நுகர் கிரு.ர்கள். 'பால் பொங்கிற்ரு: என்று ஒருவரை ஒருவர் கேட்டு மகிழ்ச்சி அடை கிருர்கள். பாலாறு தேளுருக வளஞ்சுரந்த பாரத நாட்டிலே இன்று பால் பொங்க வழி இல்லை. இருக்கிற சொட்டுப் பாலும் காலக் கொடுமையால் தீய்ந்துபோய்விடுகிறது.

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று காலையில் பெண்கள் நீராடிவிட்டு முதல் நாள் சமைத்த பொங்கலே மஞ்சள் இலையிலே காக்கைக்கு விருந்திட்டுத் தாமும் உண்கிருர்கள். இதைக் "கனு" என்று சொல்லு வார்கள். முதல் நாள் சமைத்த பொங்கல் நன்ருக ஊறிக் கனிந்து மறுநாள் பஞ்சாமிர்தம்போல இனிக் கிறது. இந்தக் கனிவுப் பொங்கலை’க் காக்கைக்கு இட்டுத் தாமும் உண்டு மகிழும் பெண்களின் முகத்திலே என்ன ஒளி! என்ன ஆனந்தம்: - -

வயல்களிலே வேலை செய்த பெண்களுக்கு இந்த இரண்டு நாளும் வேலை இல்லை; ஒய்வு.

அவர்கள் கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து கும் மி அடிக்கிரு.ர்கள். பழைய காலத்தில் அந்தக் கொண்டாட் டத்தைக் குரவை' என்று சொல்வார்கள். -

நடுவிலே ஒரு பிரப்பங் கூடையை வைத்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் அவர்கள் சேர்ந்து பாடி, கைதட்டிக் கும்மி அடித்துக் குதூகலிக்கிருர்கள். ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது கூடையில் அரிசி போடுகிரு.ர்கள்; வெல்லம் இடுகிரு.ர்கள். w

அவர்கள் பாடும் பாட்டு புலவன் இய்ற்றியதல்ல. அது ஒரு நாடோடிப் பாட்டு. அதில் எதுகை, மோனே, தளை விசேஷங்கள் இல்லை. கட்டில்லாத கவிதை அது. ஆளுலும் அது நாட்டு மக்களின் உள்ளத்திலே உள்ள மகிழ்ச்சியை உணர்த்துகிறது. அந்தப் பெண்கள் பாடி