பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நாடோடி இலக்கியம்

கட்டிக்கொண்டாகிவிட்டது. இனிமேல் வேண்டாம் என்ருல் முடியுமா? * கல்லென்ருலும் கணவன், புல்லென்ருலும் புருஷன்' என்பார்களே! அவள் தன் கணவனுக்கு ஆண்மை ஊட்டுவதென்று சங்கற்பம் செய்து கொண்டாள். மாணஞ்சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்' என்று பாரதியார் பாடுகிருர். அந்த உண்மையை உணர்ந்த வீராயி அவனுடன் கொஞ்சு கிளிமொழி பேசிக் காதல் செய்யும் போதினிலே கொஞ்சம் மிஞ்சிவரும் வார்த்தைகளையும் சொல்லி இடித்துரைப்பாள். மருந்தைத் தேனில் குழைத்துப் புகட்டும் தாய்ப்ோல அவனுக்கு இங்கித வார்த்தை களிலே ஆண்களின் முயற்சிக்கு எத்தனை கெளரவம் இருக்கிற தென்பதைச் சுட்டிக்காட்டுவாள்.

அவள் வார்த்தை ஒன்றும் அவன் காதில் ஏறவில்லை. வீராயி, சாம தான பேத தண்ட சாமர்த் தியங்களிலே வல்லவள். தன் கணவனே எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்து விடுவதென்று கங்க்னம் கட்டிக் கொண் டவனாயிற்றே! அவள் தன் கணவளுேடு ஊடத் தொடங் கிளுள், - -

அவள் ஊடல் வேலைசெய்ய ஆரம்பித்தது. மரக் கட்டையைப்போல நின்ற கணவனின் உடம்பிலே புகுந்து ரோசத்தை உண்டாக்கியது. புது மோகத்தின் மோகன சோபை இப்போது மங்கிவரும்.தருணம். ஆகையால் விராயியின் வார்த்தைகள் அவன் மனத்தில் இப்போது சுறுக்கென்று, தைத்தன. சொல்லாமல் புறப்பட்டு விட்டான். -

வீராயி இதை எதிர்பார்த்து நின்ருள். தன் கனவு னுக்கு ஆண்மை இப்போதுதான் உதயமாகி யிருக்கிற் தென்று மகிழ்பூத்தாள். ஆலுைம் உள்ளத்துக்குள்ளே

பிரிவிஞல் உண்டாகிய வருத்தம் ஒளிந்து கொண்டு துன்புறுத்தியது. ஒரு நாள், இரண்டு நாள் ஆயின,