பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரமுள்ள வீராயி 67 யையும் சொந்தச் சம்பாத்தியத்திலிருந்து வாங்கிப் போட்டிருக்கிருன, என்ன? *

வீராயியின் வீரம் சளைக்கவில்லை. அவன் காதில் படும்படி தோழியைப் பார்த்துப் பதில் சொல்லு கிருள்:

பச்சை கெல்லும் கிச்சை கெல்லும்

குத்துவான்ன இருக்கிறே? பதினெட்டுப் பணியாரம்

சுடுவான்ன இருக்கிறே? கொட்டாங்கச்சி மாப்பிள்ளையை அழைப்பான்ன இருக்கிறே? ஒழுக ஒழுகச் சந்தனத்தைப்

பூசுவான்ன இருக்கிறே? கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொள்கிருள். மேலே,

பாக்கு மரத்திலே பாக்கில்லே

பண்டாரந் தோப்பிலே பூவில்லை நேத்தறுத்த சாவலுக்கு

கெத்தமு மில்லே - இந்தப் புத்திகெட்ட மகனுக்கு

வெட்கமும் இல்லை என்று சொல்லித் தன் ஆத்திரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிருள். பேச்சின் வேகமும் அது வந்து முடிகிறதும் ஒரு நாடகம்போல அமைகின்றன. இந்தப் புத்திகெட்ட மகனுக்கு வெக்கமும் இல்லை என்று நிறுத்தும்போது அவன் கன்னத்திலே ஒர் இடி இடித்திருப்பாளென்று

தோற்றுகிறது. அந்த அபிநயம், வார்த்தை போகிற வேகத்திலேயே அகக் கண்ணில் தெரிகிறது.