பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாடோடி இலக்கியம்.

கொள்ளும்; உண்டு இன்புறும். ஆண் தவளைக்குத் துரிைச்சல் அதிகம்; வயல் வரப்பைத் தாண்டிக்கொண்டு மாலேக் காலத்தில் தத்தித் தத்தி மனிதர் நடமாடும் சாலேயிலே ஒய்யாரமாக உலாப் பழகுவதும் உண்டு. இந்தச் சமாசாரம் பெண் தவளைக்குத் தெரியாது. ஒரு நாள் தெரிந்தபோது அதற்குப் பகீரென்றது: 'மனித ருடைய ராஜ்யத்திலே நாம் தலேயிடலாமோ? அவர்கள் பவனி வரும் வீதியிலே நாம் போளுல் நம் உயிருக்கே ஆபத்து வந்துவிடும். இந்தச் சாலே அவர்களுக்கு வண்டியும் பண்டமும் வரும் வழி; நமக்கு வேதனையும் மரணமும் வரும் மார்க்கம்' என்று நயமாகத் தன் கணவ னிடம் சொல்விற்று. ஆண் கேட்டுச் சிரித்தது. 'எனக்கு எல்லாம் தெரியும்' என்று ஒரேயடியாய் அடித்துப்பெண் தவளையின் வாயை அடக்கிவிட்டது.

"ஐயோ, தெய்வமே!’ என்று அது அடங்கி - ஆண்டவனிடம் தன் பிரார்த்தனையை வெளியிடத் தொடங்கியது. - -

美 # - 尊 · ·姜

ஒரு நாள். அமாவாசை இருட்டு; ஆண் தவளையின் உற்சாகம் அளவுகடந்து போய்விட்டது. உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டே வரப்பின் மேல் உட்கார்ந்து க்ொண்டது. திடீரென்று சாலையில் தாவிக் குதிக்கும்: மறுபடி வரப்பிற்கு வந்துவிடும்; மறுபடியும் சாலையில் தத்தித் தத்தி ஓரமாகச் சிறிது தூரம் போகும்; மீண்டும் வரப்புக்கு வந்துவிடும். ஒரீ தடவைக்கு ஒரு தடவை தைரியம் அதிகமாகவே லேயில் மறுபக்கத்து ஒரம் வரையில் போய்ப் போய திரும்பிவர ஆரம்பித்தது. அதற்கு அன்று மரண தேவதை அந்த வழியே ஊர்வலம் வருவது தெரியவில்லையே, பாவம்! - . . . . .';

கட்டை வண்டியின் உருவத்தில் காலன் வந்தான்." வண்டிக்காரனுக்குப் பசி. இருட்டிவிட்டதே என்று