பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 12 தவளையின் புலம்பல்

இருபுறமும் வயற்காடு. பரந்த நிலத்திலே நிலமக ளுக்கு வகிடு எடுத்ததுபோலப் போகிறது ஒரு சாலை. உழுது பரம்படித்து நீர் நிரம்பியிருக்கும் காலத்திலே பார்த்தால் எங்கும் ஒரே நீர்மயம். அதனிடையே பாலம் போட்ட்ாற்போலச் செல்லும் கப்பிப் பாதையிலே லொடக் லொடக்கென்று போகும் கட்டை வண்டியின் சஞ்சாரந்தான் அதிகமாக இருக்கும். வயல் வரப்பு களிலே நண்டும் தவளையும் குடியிருந்து பரம்பரையாக வாசம் செய்யும். மழைக் காலங்களில் தவளைகள் இடும் கணகண சப்தமும், சாலையிலே போகும் வண்டிகளின் கடகட சப்தமும் சேர்ந்து அங்கே உள்ள சாந்தியைக் கலைக்கும். - -

இந்த மாதிரியான இடத்தில் ஒரு வயலிலே ஒரு வங்கில் ஆண் தவளையொன்றும் பெண் தவளையொன்றும் வாழ்ந்து வந்தன. காதல் செய்யும் உரிமை மனித சாதிக்குமட்டும் சொந்தமா? தவளைக்கும் காதல் இருப்பதற்கு நியாயம் உண்டு. ஆனல் மனிதன் காதலை வெளியிடக் கவிதையைக் கண்டுபிடித்திருக்கிருன். தவளைக்கு அது தெரியாது. * -

அதனுடைய கண கண், கப கப சப்தத்திற்கு அர்த்தம் தெரிந்துகொண்டு ஆராய்ச்சி செய்தால் ஒரு கால் அதன் காதற்பாட்டை உணர்ந்து கொள்ளலாமோ, என்னவோ!

ஆண் தவளை தைரியமாக வயல் வரப்பை அளவிட்டு உணவுப் பொருளைச் சேகரித்துத் தன் வங்குக்குக் -கொண்டு வரும். அதைப் பெண் தவளை வாங்கி வைத்துக்