பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 முள்ளு முனை

ஊசி முனையிலே தவம் இருப்பது கஷ்டமாம்; ஆளுல் பழங்காலத்துத் தமிழ் நாட்டுக் கதைகளிலே எவ்வளவோ பேர் ஊசி முனையிலே தவமிருந்து பயன் அடைந்ததாகப் பார்க்கிருேம். நெருப்பாற்றின்மேல் மயிர்ப் பாலம் போட்டுச் சென்ற வீராதி வீரர்களைப் பற்றிப் படிக்கிருேம். ராட்சசர்களுடைய மர்மங்களைஉணர்ந்து அவர்களுடைய உயிருலவும் இடந்தெரிந்து அவற்றைக் குலைத்துச் சங்கரித்த கதைகளையும் கேட்டிருக் கிருேம். இவையெல்லாம் இந்த நாட்டுக் கற்பனையிலே படர்ந்தவை. அப்படிக் கற்பனை செய்வதிலும் அதைக் கேட்டு ரசிப்பதிலும் நம்மவர்களுக்கு இன்பம் உண்டா கிறது. யாருக்குத் தான் இல்லை? உலகம் முழுவதும் இத்தகைய அபூத கற்பனைகளிலே மயங்குகிறது: குழந்தைப் பருவத்திலேதான் இந்தக் கற்பனைகள் அதிகச் சுவையை உண்டாக்குகின்றன. மேல் நாட்டினர் கூறும் மோகினிக் கதைகள் (Fairy Tales) எத்தனை: அவற்றைச் சிறு பிள்ளைகள், எவ்வளவு ஆவலாகக் கேட்கிரு.ர்கள்! .

செய்ய முடியாத காரியத்தைச் செய்யும் வீரர்களின் கதைகளோடு அந்த வகையிலே சில பாட்டுக்களும் உலவு கின்றன. இரண்டுக்கும் ஆதாரம் மனப்பாங்குதானே? செய்ற்கரிய காரியதின்த் ஒருவன் செய்கிருன்: அதற்கு ஆயிரத் தடைகள் வருகின்றன. அந்த வீரன் அவற் றையும் புறங்கண்டு வெற்றியடைகிருன். இந்த மூலக் கருத்தைத் தான் ராமாயணம் முதல் சித்திரக்குள்ளன் கதை வரையில் பார்க்கிருேம். .