பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள்ளு முனை 75

தடைகள் வரவர மனிதனின் முயற்சி பெருகுகிறது; வீரம் வெளிப்படுகிறது. தடைக்கு அஞ்சி நழுவுபவன் ஆணுக மாட்டான். ஆதலால் வீரர் கதைகளில் தடைகளும் வெற்றிகளும் வருகின்றன; அதனல் கதை நீளுகிறது. கேட்பவனுடைய உள்ளமும் மயங்கி நிற்கிறது.

பாட்டிலே இப்படி வரும் ஒன்றைப் பார்க்கலாம். இது கதையல்ல; கதையும் கொஞ்சம் இருக்கிறது. ஒருவன் முயற்சி செய்கிருன்: வேண்டிய கருவிகள் இல்லாமலே த ன் னு ைட ய உற்சாகத்தையே துணைகொண்டு முயல்கிருன். பலன் சிறந்ததாக இருக்க வில்லை. ஆனாலும் விடாப்பிடியாகச் செய்து வருகிருன். ஒவ்வொரு படியிலும் அவன் குறைபாட்டைக் காண்கிருன். ஆனாலும் சலிப்பதில்லை. பல படிகளையும். தாண்டி முடிந்த நிலையிலும் ஒரு குறை. இந்தக் கருத்தை முள்ளு முனையிலிருந்து ஆரம்பித்துச்

சொல் கிருன். - - முள்ளு முனையிலே மூணுகுளம் வெட்டினேன்.

ரெண்டுகுளம் பாழு - ஒண்ணு தண்ணியே இல்லை. தண்ணியில்லாக் குளத்துக்கு மண்ணுவெட்ட மூணுபேரு

ரெண்டுபேரு மொண்டி - ஒத்தன் கையே இல்லை. கையில்லாத குசவன் செய்தது மூணுபானை

ரெண்டுபான பச்சை - ஒண்ணு வேகவே இல்லை. வேகாத பானைக்குப் போட்டரிசி மூணரிசி -- -

'ரெண்டரிசி நறுக்கு - ஒண்ணு வேகவே இல்லை. வேகாத சோற்றுக்கு விருந்துண்ண மூணுபேரு ... . - ரெண்டுபேரு பட்னி - ஒத்தன் உண்ணவே இல்லை.

உண்ணுத கொத்தன் கட்டினது மூணுகோயில்

ரெண்டு கோயில் பாழு ஒண்ணு சாமியே இல்லை.