பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காடோடி இலக்கியம்

பற்றிக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போய், நம்முடைய கண்ணிலே பிரத்தியட்சமாகக் காண்பதை இவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லையே என்று குறை கூறவும் தொடங்குகிருேம். எத்தனை நாளைக்குத்தான் இந்த லட்சிய உருவாரங்களே வைத்துக்கொண்டு மாரடிப்பது? ஒரே மாதிரியான கதா நாயகர் அசேத்தான் எல்லாக் காவியங்களிலும் சொல்லுகிரு.ர்கள். அவனிடம் குற்றம் இருக்கக் கூடாதா? அவன் தேவலோக வாசியாக, மண்ணிலே கால் பாவாமல், மனசிலே ஆற்றம் இல்லாமல் ஆகாசத்திலே பறக்கிருன். அவனுக்கும் நமக்கும் லவ லேசங்கூட ஒற்றுமை இல்லை. இந்தக் கதையை வைத்துக் கொண்டு நாம் எப்படி ரசிப்பது?

இப்படிச் சொல்ப்வர்கள் உண்மையில் இலக்கியத்தில் ஒர் அம்சம் மரத்துப்போய், கவனிப்பாரற்று விட்டதைச் சுட்டிக் காட்டுபவர்கள் ஆவார்கள். அலங்கார நூலை சாஸ்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் தன்மை நவிற்சியைத்தான் அலங்கார இலக்கணப் புலவர் சொல்கிருர். உள்ளதை உள்ளபடியே வருணிக்கும் அழகைத்தான் முதல் அலங்காரமாக வைத்திருக்கிருர்கள். இயற்கையான அழகுக்குத்தானே முதல் இடம் கொடுக்க வேண்டும்? ஆளுலும் அந்த இயற்கையான அழகைச் செயற்கை யழகினூடே நாம் மறைத்து வைத்து விட்டோம். அது எங்கேயோ ஒரு மூலையில் உயிரைவிட மாட்டாமல் மின்மினிபோலப் பளிச்சிடுகிறது.

இப்படி வளர்ந்து வந்த காவிய முயற்சிகளுக்கு இடையே உலக இயற்கையையும், மனிதனுடைய குறை பாடுகளையும், சமூகத்தின் ஊழல்களையும் உள்ளது உள்ள வாறே சொல்லி இன்புறும் வழக்கம் மனிதர்களிடத்தில் இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது. பெரிய சபை பிலே ஒரு மனிதரை வானளாவப் புகழ்கிருேம்; அவரு டைய குண நலங்களை உயர்வு நவிற்சியாகப் பிரமாதப் படுத்தி விரிக்கிருேம். வீட்டுக்கு வந்தால் நம்முடைய