பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசிக்காரன் 8 :

நண்பரிடையே தனியே. 'மகா பெரியவன்! சொந்தக் கா ரனுக்கு ஒரு நாள் சோறு போட மாட்டான்! புத்த நிதிக்கு லக்ஷ ரூபாய் தந்துவிட்டா ை!' என்று அவரு டைய குறைபாடுகளை அலசிப் பாக்கத் தொடங்கு கிருேம். அப்படித்தான் இருக்கிறது காவியமும். மனித னுடைய பெருமைகளையும், அவனுடைய நன்ளுேக்கங் களேயும் புலவர்கள் கதையாகவும் நீதி நூலாகவும் வகுத்துப் புனேகிரு.ர்கள். அதே சமயத்தில் அவனுடைய குற்றங்களை நாடோடிப் பாட்டுக்கள் வெளிப்படுத்திச் 'சிரிக்கின்றன. கற்பின் சிறப்பைக் காவியம் பாடுகிறது. உலகத்திலிருக்கும் விபசார நிகழ்ச்சிகளை நாடோடிப் பாடல் சித்திரிக்கிறது. அறிவாலும் திருவாலும் இளமை யாலும் ஒத்த காதலன் காதலியரைக் கதாநாயகர் களாக்கிப் புலவன் காவியம் வனகிருன். அடுத்த வீட்டில் அறுபது வயசுக் கிழவன் மூன்ருந்தாரமாகப் பத்து வயசு ப் பெண்ணைக் கட்டிக சொண்ட கதையை நாடோடிப் பாட்டுச் சொல்லிக் கெக்கலி கொட்டுகிறது.

தினந்தோறும் நிகழும் நிகழ்ச்சிகளை இலக்கியத்தில் காணுது தவித்த பேர்களுக்கு நாடோடிப் பாடல்களில் சுவை அதிகமாசத்தான் இருக்கும். லட்சிய வாழ்வைச் சித்திரிக்கும் காவியத்திலே இனி ஆயிரம் ஆண்டுகளுக்கு வாராத "ஆபாசங் களை நாடோடிப் பாட்டிலே பச்சை பச்சை யாகச் சொல்லி யிருக்கிரு.ர்கள்: அந்த ப் பாட்டிலே அதன் தனிப்பட்ட பாணியிலே அவை அழகாகத் தான் இருக்கின்றன. உள்ளதை உள்ளவாறு சொல்லும் முன்னேற்ற எழுத்தாளர்கள் இக்காலத்தில் மறு மலர்ச்சியை உண்டாக்குவதாகச் சொல்கிரு.ர்கள். அந்த முயற்சி, முயற்சி என்ன, கைவந்த செய்கை, நாடோடி இலக்கியத்திலே இருக்கத்தான் இருக்கிறது,

கிழவனுக்கு வாழ்க்கைப்பட்ட குமரிகளின் சுதைகள் ஆயிரக் கணக்கில் கர்ணபரம்பரையாக நாம் கேட்டிருக்

நா. 6.