பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாடோடி இலக்கியம்

கிருேம். புலவர் உலகம் அவற்றிற்கு நித்தியத்துவத்தை அருள் செய்யவில்லை. கிழவனுக்குத் தங்கள் பச்சிளங் குழந்தையைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கும் தாய் தந்தையர்களுக்கு முக்கியமான தேவை பணம் அல்லது சோறு. தங்கள் குழந்தைகளின் காதலின்பத்தை அவர் கள் கனவிலும் எண்ணுவதில்லை. தங்கள் வீட்டுப் புறக் கடையில் விளையும் கத்திரிப் பிஞ்சைப் பறித்து வீதியிலே அரிசிக்காக விற்றுவிடும் கத்திரிக்காய்ப் பேரந் தான் இவர்கள் செய்யும் கல்யாணம். அரிசிக்கு விற்பது கத்திரிக்காயானலும் கன்னிகையானலும் அவர்களுக்கு வித்தியாசம் இல்லை. கத்திரிக்காய்க்கு ஒரு தடவைதான் அரிசி கிடைக்கும். கன்னிகைக்கோ ஒவ்வொரு நாளும் அரிசி, சோறு கிடைக்கும். கிழவனுக்குத் தங்கள் குழந் தையைக் கட்டிக் கொடுத்துவிட்டு அக் கிழவன் குடும்பத் திலே போய்ச் சேர்ந்து கொள்ளும் தாய்தகப்பன்மார்கள் எவ்வளவு பேர்களை இந்த உலகம் கண்டிருக்கிறது!

தங்களைக் காட்டிலும் சோறு துணிக்குப் பஞ்சம் இல்லாமல் வாழும் ஒருவனுக்கு அவனுடைய வீட்டில் இருக்கும் அரிசி மிகுதிக்காக இளம் பிஞ்சுகளை விற்கத் துணிகிருர்கள் வறிய பெற்ருேர்கள். சின்னஞ் சிறு குழந்தைக்கு, தன்னை மணக்கும் கிழவனுக்கும் தனக்கும்.' எந்தவிதமான உறவு ஏற்படப் போகிறது என்பது கொஞ்சங்கூடத் தெரியாது. தன் பெற்ருேர்களுக்ரு. அவன் உபகாரமாக இருப்பான், அதற்குத் தான் இடை யில் நின்ற ஒரு கருவி என்னும் உண்மையையும். அவள் அறிந்து கொள்வதில்லை. அவளைக் கட்டிக் கொடுக்க எண்ணும் தாயே அவளுக்கு உபதேசிக்கிருள். கிழவனைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவள் வேறு ஒரு காரணமும் கூறுவதில்லை. அவன் தங்கள் பட்டினியைத் தீர்க்க வந்த அரிசிக்காரன் என்று சொல்லித் தன் மகளுக்கு உபதேசம் செய்யத் தோடங்குகிருள். மகள் பெயர் ராமாயி. .