பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசிக்காரன் 83

அடி அடி ராமாயி!

அரிசிக்காரன் வாராண்டி.

தனக்கு மாப்பிள்ளையாக வரப்போகும் மனிதனைத் தாய் எப்படி காண்கிருள்? ஒரு பெரிய அரிசி மூட்டையைப் போல நினைக்கிருள். அரிசிப் பஞ்சமும், பங்கீடும் உள்ள காலத்தில் சேர்ந்தாற்போல் பத்து மூட்டை நெல்லூர் அரிசி ஒருத்தனுக்குக் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவான்! அத்தகைய மகிழ்ச்சி யோடுதான் ராமாயியின் தாய் பேசுகிருள். அரிசிக் காரன் அரிசி மூட்யைாகிய பரிசத்தோடு வருகிருன். கிடைக்கக் கூடிய பொருளா அது? அடேயப்பா : ஒரு நாளைக்கு அரைப் புடி அரிசி சம்பாதிக்க எவ்வளவு அல்லற்படவேண்டி யிருக்கிறது. ஆயுசு முழுவதும் குடும்பத்தார் அனைவரும் பசியின்றி வயிறு நிறையச். சாப்பிட அரிசி கிடைத்துவிட்டால், அப்புறம் வாழ்க் கையில் என்ன வேண்டும்? அந்த நிலையைப்பெறுவதற்கு எதைத்தான் தியாகம் செய்யக்கூடாது? -

அரிசிக்காரன் வந்துவிட்டான். அவன் ராமாயியை உத்தேசித்து வருகிருன். ராமாயிக்கு அரிசிக்காரன் பெருமையும் தெரியாது: அகமுடையான் பெருமையும் தெரியாது. அவ்வளவு இளையவள்.

'அடி ராமாயி அரிசிக்காரன் வருகிருன் வயிறு நிரம்பச் சோறு கிடைக்கும். எல்லாம் உன்னல் வரும் வாழ்வு. நீ அவைேடு வாழவேண்டும்' என்று சொல்ல நினைக்கிருள் தாய். அவைேடு வாழ்வதென்ருல் குழந் தைக்கு விளங்க வேண்டுமே! ஆகையால் அதை விளக்குகிருள். . . . . .

சின்னக் குழந்தையல்லவா? அவளுக்கு விளையாட் டென்ருல் மிகவும் பிரியம். வாசலிலே மணலில் சின்னச் சின்ன வீடு கட்டி விளையாடுவதிலும் சிலுக்குச் சிலுக்