பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசிக்காரன் 85

இவ்வளவு தூரம் சொன்ன சமாசாரங்களெல்லாம் விளையாட்டுக் குழந்தைக்கு விளையாட்டாகவே படலாம். தாய் விளையாட்டையா சொல்ல வருகிருள்? அல்லவே அல்ல. வினையைச் சொல்ல நினைக்கிருள். அதற்குத் தான் பீடிகை போடுகிருள். குழந்தைக்குக் கொஞ்சங் கொஞ்சமாக உருவேற்றுகிருள். கடைசியில் வருகிறது காரியப் பேச்சு. .

'அம்மா, ராமாயி! இந்த மாதிரி சின்ன வீட்டைக் கட்டிக்கொண்டு கெட்டி மஞ்சளையும் பூசிக்கொண்டு. ’’ யாரோ டம்மா விளையாட வேனும்: எந்தக் குழந்தை விளையாட வரப்போகிறது?’’ .

'இந்த விளையாட்டிலே அதுதான் வித்தியாசம், குழந்தாய்! உன்னேடு விளையா-ச் சின்னக் குழந்தை வரவில்லை. உன்ளுேடு பேசுவதற்குப் பெரிய கிழவன் வருவான்.'

இப்படியெல்லாம் தாய் ஓர் உரையாடலை மனத்துக் குள்ளே கற்பனே செய்துகொள்கிருள். .

கெட்டி மஞ்சளைப் பூசிக்கோ! கிழவளுேடே பேசிக்கோ!

என்று சொல்லி உபதேசத்துக்கு முடிவு கட்டுகிருள். சின்ன வீடு, சிலுக்குத் தாழ்ப்பாள், கெட்டி மஞ்சள் இவ்வளவு விளையாட்டுச் சாமான்களும் அந்தக் குழந் தைக்குப் பிரிய்மானவைகளே. அவற்றை அளித்து அந்தச் சுய காரியப் புலியாகிய, தாய் என்ன செய்கிருள்? தனக்கு வேண்டிய கிழவனேடுகட, அந்த அரிசிக்காரக் கிழவனேடுகூட, பச்சைக குழந்தையைப் பேசச் சொல்கிருள்! விளையாடக்கூட அவசூல் முடியாது.

அடி அடி ராமாயி!

அரிசிக் காரன் வாாாண்டி!