பக்கம்:நாட்டிய ராணி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


வரையில் அங்கு யாருமே வரமாட்டார்கள். அதனுல் பயமில்லை என்று அது நினைத்துக் கொண்டது.

  • சரி, ஆடு பார்க்கலாம் ” என்றது குள்ளநரி.


நாட்டியராணி ஆடத் தொடங்கிற்று. நல்ல நல்ல ஆட்டங்கள், இப்படி ஆடிக்கொண்டே அது சுவர் ஒரத்தில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய முரசின் பக்கமாகச் சென்று டக்கு டக்கு என்று ஆடிக்கொண்டே அந்த முரசைத் தலையால் முட்டி, திடும் திடும் என்று சத்தம் உண்டாக்கிற்று.

  • அது எதற்கு அந்த திடும்திடும் ? ” என்று குள்ளநரி கேட்டது.

" ஆடினுல் நடனத்திற்கு தகுந்தவாறு தாளம் வேண்டாமா ? அதற்குத்தான் இந்த திடும்திடும். இதுவும் சேர்ந்தால் ஆட்டம் இன்னும் நன்ருக இருக்கும் ” என்று ஆட்டுக்குட்டி விளக்கம் கொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/11&oldid=1064693" இலிருந்து மீள்விக்கப்பட்டது