பக்கம்:நான்மணிகள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான் மணிக்கடிகை 15.

மொய்சிதைக்கும் ஒற்றுமையின்மை யொருவனைப் பொய்சிதைக்கும் பொன்போலு மேனியைப்-பெய்த கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங் கூடார்கட் கூடி விடின். (21).

புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப் பேணாது செய்வது பேதைமை - காணாக் குருடனாச் செய்வது மம்மர் இருடிர்ந்த கண்ணராச் செய்வது கற்பு. (22).

மலைப்பினும் வாரனந் தாங்கும் அலைப்பினும் அன்னேயென் றோடுங் குழவி - சிலைப்பினும் நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார் உடனுறையுங் காலமு மில். (23).

நகைநல நட்டார்க ணந்தும், சிறந்த அவைநல மன்பின் விளங்கும் - விசைமாண்ட தேர்நலம் பாகனாற் பாடெய்தும், ஊர் நலம் உள்ளானால் உள்ளப் படும். (24),

அஞ்சாமை யஞ்சுதி யொன்றிற் தனக்கொத்த எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக் கோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதி நாட்டார்கண் விட்ட வினை. (25),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/17&oldid=587222" இருந்து மீள்விக்கப்பட்டது