பக்கம்:நான்மணிகள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை 25,

நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய மாற்ற முரைக்கும் வினை நலந் தூக்கின் அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம் முகம்போல முன்னுரைப்ப தில், (46)

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும் தவமிலார் இல்வழியில்லை தவமும் அரசன் இலாவழி யில்லை அரசனும் இல்வாழ்வாரில்வழி யில். (47).

பூவினா னந்தும் புனைதண்டார் மற்றதன் தாதினா னந்துஞ் சுரும்பெல்லாம் - தீதில் வினையினா னந்துவர் மக்களுந் தத்தம் நனையினா னந்தும் நறா. (48).

சிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும் பிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல் வரைந்தார்க் கரிய வகுத்துரண் இரத்தார்க்கொன் றில்லென்றல் யார்க்கு மரிது. (49)

இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால் உரைசுடும் ஒண்மை யிலாரை - வரைகொள்ளா முன்னை யொருவன் வினைசுடும் வேந்தனையுந் தன்னடைத்த சேனை சுடும். - (50),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/27&oldid=587252" இருந்து மீள்விக்கப்பட்டது