பக்கம்:நான்மணிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் ஒழுக்கத்தையும் கடமை உணர்ச்சியையும் உயிரென ஒம்புபவர்கள். ஒழுக்கக் குறை கண்டபோது அவர்கள் எவ்வாறு துடிதுடித்து விடுவார்கள் என்பது அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். அவர்கள் தாம் கண்டவற்றை மக்களுக்கு உணர்த்தி நல் வழிப்படுத்த "அறிவுக்கு உணவு" போன்ற நூல்களை எழுதி இருப்பதுடன், பண்டைய பெரும் புலவர்களது இலக்கிய நூல்களையும் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப உரை நடையில் எழுதி வருகிறார்கள். இந்த வகையைச் சேர்ந்தது முன்னர் வெளிவந்த "மும்மணிகள்" என்ற நூலும் இந்த "நான்மணிகள்" என்ற நூலும். இனி இதைத் தொடர்ந்து ஐந்து மணிகள், மூதுரை முத்து, நல் வழிச்சாறு முதலியனவும் வரவிருக்கின்றன.

கி. ஆ. பெ அவர்களின் நடை அழகிலும் சொல்லா ராய்ச்சியிலும் கருத்துச் செறிவிலும் உள்ளத்தைப் பறி கொடுத்து, அவர்களின் புதிய நூல்களைக் காணத் துடித்து நிற்கும் தமிழ் மக்களுக்கு நாங்கள் வழங்கும் பொங்கல் பரிசு நான்கு மணிகள். தமது அறிவுப் படையல்களை அள்ளி வழங்க ஏற்ற கலமாக எங்களை ஏற்றுக் கொண்ட முத்தமிழ்க் காவலர் விசுவநாதம் அவர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும்.

சென்னை தங்களன்பிற்குரிய, 14-1'6ύ பாரி நிலையத்தினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/5&oldid=1354895" இலிருந்து மீள்விக்கப்பட்டது