உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் இருவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் 4- ஜன்னலில் கண்டது. வழக்கம்போல் இந்த ஞாயிற்றுக்கிழமையும் என்பீல்டும் அட்டர்ஸனும் உடல்வப்போன போது, மீண்டும் அந்தச் சின் னச் சந்தின் வழியாகச் செல்ல நேர்ந்த து. அந்த வீட்டின் முன் சென்றதும் இருவரும் அதை ஏறிட்டுப் பார்த்தார்கள். " அந்தக் கதை ஒரு மட்டும் முடிந்து தொலைத்தது. ஹைடைப்பற்றி இனி எந்தச் செய்தியையும் காண முடியாது” என்று ஆரம்பித்தார் என்பீல்ட். " நான் அப்படி நினைக்கவில்லை, நானும் அவனை ஒரு தரம் சந்தித்து, உன்னைப் போலவே அவன் மீது வெறுப்படைந்தேன் என்பதை உன்னிடம் சொல்லவில்லையா ?' " அவனைப் பார்த்தாலே! அப்படித்தான், சரி : இன்னொரு சங்கதி. டாக்டர் ஜெகிலின் வீட்டுக்கு இது புறவாசல் என்.தே எனக்கு அப்போது தெரியா'. து., இதை நாள் தெரிய வந்ததே உன்னால்தான் " என்றார் என்பீல்ட். " ஓஹோ", தெரிந்து கொண்டு விட்டாயோ? அப்படியானால், தாழ்வாரத்தில் நுழைந்து, ஜன்னல்களை யெல்லாம் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்ப்போமே. உண்மையைச் சொல்லப்போனால், ஜெகிலைப்பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். வெளியில் நின்றாலும்கூட, ஒரு நண்பனின் வரவு அவனுக்கு ஆறுதலளிக்கும்" என்றார் அட்டர்ஸன். தாழ்வாரம் குளுமையாயிருந்தது; ஈரமாயுமிருந்தது. அஸ்த மனம் நெருங்காவிடினும், அதற்குள் மஞ்சள் வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த மூன்று ஜன்னல்களில் பத்தியில் லுள்ள ஜன்னல் பாதி திறந்து கிடந்தது. அந்த ஜன்னலோரம் அமர்ந்து, அமைதியற்ற கைதியைப் போல, சோகமே உருவாய் அமர்ந்திருந்தார், டாக்டர் ஜெகில். " ஜெகில், ஜெகில் ! சௌக்கியமா?" என்று சத்தமிட்டார் அட்டர்ஸன். " இல்லை. ரொம்பவும் தளர்ந்து போய்விட்டேன், ரொம்ப காலம் தாங்காது" என்று பதில் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/49&oldid=1268773" இலிருந்து மீள்விக்கப்பட்டது