பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8



குலுக்கின மகிழ்சசயைவிட கைகள் அப்படியே இருந்தனவே என்று மகிழ்ந்தோம்.
இவ்வளவும் நடைபாதையில் நின்றபடியே நிகழ்ந்தது. உரையாடல் ஆங்கிலத்தில் நடந்தது. 'இவ்வளவு நல்ல ஆங்கிலம் பேசுகிறீர்களே' என்று பாராட்டினோம். 'கற்றுக் கொண்டால் பேசுவதற்குக் குறையென்ன?’ என்று கேள்வியாகப் பதில் அளித்தார். 'பள்ளியிலா கற்றுக் கொண்டீர்கள்?'-அடுத்த கேள்வி.
'நான் படித்த காலத்தில் பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கவில்லையே!' தோழரின் பதில் இது.
'பின் எங்கு எப்போது கற்றீர்கள்?’ என்று வினவினோம். பெரியவனான பிறகு இரவுப் பள்ளியில் கற்றுக் கொண்டேன் ஆங்கிலம்’ என்றார் டாஸ்கண்ட் தோழர்.
-நன்றாகக் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். வயது ஏறினும் பாடத்தைக் கைவிடாத நீங்கள் எங்களுக்கு எடுத்துக்காட்டு’ என்றோம். அவர் புன்முறுவல் பூத்தார்.
எங்களுக்கு ஒர் ஐயம். அதை நீக்க முடியுமா?" என்றோம். அவர் முயல்வதாகக் கூறினார்.
திறந்த சாளரங்களே உடைய அடுத்த கட்டடத்தில் நடக்கும் கூட்டம் என்ன என்று பார்த்துச் சொல்லுங்கள் என்றோம். சரி என்று எங்களோடு நடந்து வந்தார். கட்டட வாயிலில் செப்பேடு ஒன்று பதிக்கப்பட்டிருந்தது. அதன் அருகில்