பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9



சென்றர். படித்துப் பார்த்தார். முதியோர் பள்ளிக் கூடம், என்றார். ஆ! பாட்டிகள் பள்ளியா இது’ என்று வியந்தோம். என்ன கற்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டோம். இந்த வயதிலா தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்கிறர்கள்? என்பது எங்கள் ஐயம்.
வெளியே, நடைபாதையில் நின்றபடியே சாளரத்தின் வழியாகக் கரும்பலகையை உற்று நோக்கினார். ஜெர்மானியமொழி கற்கிறார்கள்’ என்று விளக்கினார். உங்களுக்கும் அம்மொழி தெரியுமோ?" என்றோம். நன்றாகத் தெரியாது. அம்மொழியை அடையாளம் கண்டு கொள்வேன்’ என்றார். உங்கள் தாய்மொழி எது?’ என்று கேட்டோம். உஸ்பெக் என்ருர். இத்தனை மொழி கற்றிருக்கிறீர்களே என்றோம். நிரம்ப நிரம்பக் கற்க மேலும் மேலும் மகிழ்ச்சி' என்றார்
. பாட்டிகளெல்லாம் ஜெர்மானிய மொழி கற்கிறார்களே, தாய் மொழியும் இரஷிய மொழியும் கற்கக் கூடாதா? என்று கேட்டு வைத்தோம்.
'முதியோர் கல்வி, முதல் கல்வியன்று' இவர்கள் முன்பே தாய் மொழியாகிய உஸ்பெக்கையும் ஒன்றிய மொழியாகிய இரஷிய மொழியையும் கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று விளக்கினார். காதுகள் எங்களை ஏமாற்றிவிடுகின்றனவோ என்று நினைத்தோம். பள்ளிப் பருவத்திலா, இம்மொழிகளைப் படித்திருப்பார்கள் என்று கேட்டோம். அநேகமாகப் பின் பருவத்திலேயே படித்திருப்பார்கள். இவர்கள் சிறுமிகளாக இருந்தபோது, எங்கோ ஒரு பள்ளிக்கூடமே இருந்தது.