உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

நாங்கள் சென்ற விமானத்தில் இரு வகுப்புகள் இருந்தன. பயணிகள் வகுப்பு, முதல் வகுப்பு என்பன அவை. பயணிகள் வகுப்பில் உட்காரும் நாற்காலியை ஒரளவு பின்னல் சாய்த்துக்கொண்டு பயணஞ் செய்யவேண்டும். முதல் வகுப்பில் சாய்வு நாற்காலிபோலப் பின்னால் சாய்ந்து கொள்வதோடு கால்களைக் கீழே தொங்கவிடாமல், உயர்த்தி நீட்டிக்கொள்ளவும் இடமுண்டு. முதல் வகுப்பிற்குக் கட்டணம் அதிகம். எங்களுக்கு முதல் வகுப்பு அனுமதித்திருந்தனர். ஆகவே காலே நீட்டிச் சாய்ந்து ஓய்ந்திருந்தேன். விண்ணிலே பறக்கையில் மண்ணைப்பற்றியா கவலை?.

சில வினாடிகள் கழிந்தன. 'குடிப்பதற்கு என்ன வேண்டும்?' என்று ஒவ்வொருவராகக் கேட்டு வந்தார், விமானப் பணிப்பெண். ஆரஞ்சுப் பழச்சாறு’ என்றேன். விறுவிறுப்பற்ற மதுவும் கிடைக்கும் என்ருர். தேவையில்லை என்ற பதில் அவ ருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஏன்? முதல் வகுப்புக் கட்டணத்தில் மதுவின் விலையும் அடங்கியுள்ளதாம். அதற்கும் சேர்த்துப் பணம் கொடுத்து விட்டுக் குடிக்காவிட்டால் பணம் வீணல்லவா? அதுதான் அவருக்குக் குறை. ஆனால், கேட்ட பழச்சாறு கிடைத்தது.

மெள்ள மெள்ள, பழச்சாற்றைக் குடித்துக் காலத்தைப் போக்கினேன். விமானத்திலிருந்து கீழே பார்த்தேன். பஞ்சாபின்மேல் பறந்துகொண்டிருந்தோம். பச்சைப் பசேலென்று பரந்த வயல்கள். இன்ன பயிர் என்று தெரியவில்லை. மரங்களே சிறுபச்சைக் குச்சிகள் போல் தோன்றின. நீண்ட