பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. கல்விக் கோயில்கள்!

டாஸ்கண்டில் உஸ்பெக் குடியரசின் கல்வி அமைச்சரோடு அறிமுகப் பேட்டி முடிந்தது. ஒரு மணி நேரத்தில் நிரம்பத் தெரிந்துகொண்டோம். வளர்ச்சியின் வேகத்தையும் விரிவையும் சுட்டிக் காட்டினர் தோழர் கதிரவ். வாய்ப்புகளின் பெருக் கத்தை எடுத்துரைத்தார் அவர்.

அமைப்புகளை நேரடியாகக் காண விரும்பினோம். பள்ளிப் பார்வை தொடங்கிற்று. டாஸ்கண்டிலிருந்த நான்கு நாள்களும் எங்களைப் பம்பரம் போலச் சுழற்றினர். ஞாயிற்றுக்கிழமைகூடச் சோம்பியிருக்க விடவில்லை. ஆய்யென்று ஒய்ந் திருக்கவிடவில்லை. ‘கிண்டர்கார்டன்’ என்றழைக் கப்படும் பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகப் பிரிவு வரை காட்டினர். பதினோரு கல்வி நிலையங்களைக் கண்டோம். இளைஞர் ஈடுபாடு நிலையங்கள் இரண்டைக் கண்டோம். ஓட்டமும் நடையுமாகக் காட்டி வரவில்லை. ஒவ்வொன்றையும் உற்றுநோக்கி, கேட்டுத் தெரிந்துவரப் போதிய நேரம் ஒதுக்கினர்; கலை நிகழ்ச்சி இரண்டிற்கும் சென்றோம்.

அவற்றைப்பற்றி எங்கள் கருத்தென்ன? கல்வி நிலையங்களில் சிலவே புதுக் கட்டடங்களில் இயங்கின. பல பழைய கட்டடங்கள்; பள்ளிக்கூடத்திற் காகக் கட்டப்பட்டவையல்ல. அவற்றுள் சில முன்னாள் பணக்காரர்களின் மாளிகைகள். எனவே