பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

இதோ பதில்: இப்பல்கலைக்கழகத்தில் தங்கிப் படிப்போர் 6000 பேர். அன்றாடம் வந்து படிப்போர் 22,000 பேர். பொறியியல், மருத்துவம் ஆகிய இரு துறைகளுக்கு மட்டும் பல்கலைக் கழகங்களில் இடமில்லை. இவ்விரண்டையும் கற்றுக் கொடுக்கத் தனித்தனி கல்விக்கூடங்கள் உள்ளன. மற்ற எல்லாப் பெரும் பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன. மொழிநூல், சட்டம், பெளதிகம், வேதியியல், உயிரியல் ஆகிய ஐந்து பெரும் துறை களிலே பலப்பல கிளைகளைக் கற்கின்றனர்.
'இது பழம்பெரும் பல்கலைக்கழகமா? புரட்சி யின் விளைவா? என்று கேட்டோம்.
பதிலின் சுருக்கம் இதோ : பழைய பல்கலைக் கழகம். இது ஏற்பட்டது 1755ஆம் ஆண்டில். ஏற்படுத்தக் காரணமானவர் மைக்கேல் லொமனசன் என்பவர். இவர் யார்? கோமகனா? இல்லை. பிரபுவின் மரபா? இல்லை. செல்வச் சீமானா? இல்லவே இல்லை. வழிவழி படித்த குடும்பத்தவரா? இல்லை ஐயா இல்லை! பின் யார்? மீனவர் மகன். பத்து வயதில் தந்தையோடு கடல்மேல் சென்று மீன் பிடித்த சிறுவன். கடல்மேல் செல்ல முடியாத பனிக் காலத்தில் இரவில் வீட்டோடு படித்தவன். மைக்கேல் பிறந்த ஊர் எது? ஆர்க்கேஞ்சல் நகரத்திற்கு அடுத்த டெனிசூகா என்னும் பட்டிக் காடு. பிறந்தது எப்போது? 1711 ஆம் ஆண்டில். பள்ளியில் சேரவில்லையா? அடுத்துள்ள நகரப் பள்ளியில் சேர முயன்றார்; இடம் கிடைக்கவில்லை. ஏன்? படிப்பு எதற்கு ஏழை மீனவனுக்கு என்றே